மிதுனத்துக்கு புது கார், புது வீடு வாங்கும் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கம், பணமாக மாறும் சூப்பர் நேரம்
சுக்கிரன் பெயர்ச்சி: ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டில் ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சுக்கிரனே எல்லா மனித உயிர்களுக்கும் காதலுக்கு காரணமாக இருப்பவர். காதலின் கிரகமாக கருதப்படும் சுக்கிர பகவான் ஜூன் 28 ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு செல்கிறார். பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார்.

திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள். அந்த வகையில், இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுன ராசி பலன்
மிருகசீரிஷம் 3, 4 பாதங்களையும், திருவாதிரை 1, 2, 3 பாதங்களையும், புனர்பூசம் 1, 2, 3 நட்சத்திர பாதங்களையும் கொண்டது மிதுன ராசி. பொதுவாக நல்ல புத்திசாலித்தனமாக இருக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். தகவல் தொடர்புத் துறை அற்புதமாக இருக்கும். எந்த இடத்தில் எதைப் பேச வேண்டுமோ அதை பேசி காரியத்தை சாதிக்கக் கூடியவர்களாக இருப்பீர்கள்.
குழந்தைகள்
உங்கள் ராசிக்கு 5, 12 ஆம் இடத்துக்கு உரியவர் சுக்கிரன். 11 ஆம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் தற்போது 12 ஆம் இடத்தில் வந்து ஆட்சி பலத்தோடு வலிமையாக இருக்கப் போகிறார். உங்களுக்கு நல்ல யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும் காலகட்டமாக இருக்கும். 5 ஆம் இடம் என்பது குழந்தைகளை குறிக்கக் கூடிய இடம். இந்த காலகட்டத்தில் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றக் கூடிய காலகட்டமாக இருக்கும்.
படிப்பு
பிள்ளைகளின் படிப்பு அற்புதமாக இருக்கும். அவர்கள் விரும்பும் துறைகள் கிடைக்க கூடிய யோகம் உண்டாகும். வீட்டை விட்டு வெளியே சென்று அவர்கள் வெளியில் படிக்கக் கூடிய யோகம் உண்டாகும். மற்ற மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் படிக்கும் வாய்ப்பு பிள்ளைகளுக்கு ஏற்படும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். அதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
திடீர் அதிர்ஷ்டம்
5 ஆம் இடம் என்பது திடீர் அதிர்ஷ்டம், பதவி கிடைக்கும். பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு அருமையான பதவி உயர்வு கிடைக்கும். ஜூலை மாதம் 25 ஆம் தேதி வரை வரும் 27 நாட்கள் சிறப்பான காலகட்டமாக உங்களுக்கு இருக்கும். முயற்சி ஸ்தானத்தின் அதிபதி சூரியன். சூரியன் நட்சத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் பெயர்ச்சி செய்யும்போது அரசு, அரசாங்கம் சார்ந்த அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். அரசு சார்ந்த விஷயங்களில் இருந்த தடைகள் பரிபூரணமாக விளங்கும்.
பண வரவு அதிகரிக்கும்
அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளை எழுதுவீர்கள். பூர்வீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகளை தீர்க்கும் எண்ணம் உண்டாகும். ஜூலை 8 முதல் 25 ஆம் தேதி வரை சந்திரனின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி ஆவதால் பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். லாபங்களை கொடுக்கக் கூடிய காலகட்டமாக அமையும்.
வீடு, வண்டி வாங்கும் யோகம்
சுக்கிரன் ஆட்சி பலத்தோடு வந்து அமரப் போகிறார் என்பதால் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வீடு வாங்குவதற்கான முயற்சிகள், கட்டுவதற்கான முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். சிலர் கட்டிய வீடுகளை புனரமைப்பு செய்வீர்கள். 4 ஆம் இடத்தை சனி பார்ப்பதால் ஏற்கனவே உள்ள வீட்டை வாங்கி புனரமைப்பீர்கள். அதேபோல, புதிய வாகனங்களை வாங்குவதற்கான யோகம் உண்டாகும்.
காதல், நண்பர்கள்
புதிய உறவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. காதல் உணர்வுகள் ஏற்படும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். அன்பு, காதல் பெருகக்கூடிய காலகட்டமாக இருக்கும். தொழில், வேலையில், இருக்கும் இடத்தில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அந்த நண்பர்களின் மூலமாக உங்கள் தொழில், வேலை, வியாபாரத்தில் வளர்ச்சியைக் காணக்கூடிய காலகட்டம் உண்டாகும்.
பயணம்
வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கடல் கடந்து பயணம், உள்ளூர், வெளியூர் பயணம் ஏற்படும். நல்ல தூக்கம் கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். இந்த சுக்கிரப் பெயர்ச்சி உங்களுக்கு அற்புதமான யோகத்தை அள்ளித் தரும் காலகட்டமாக இருக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
Tamil Puthandu Rasi Palan: மீனம் ராசிக்கு கோடிகளை குவிக்கும் நேரம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க












Click it and Unblock the Notifications