கூரையை பிச்சுகிட்டு கொட்டும் சுக்கிரன்.. ரிஷப ராசிக்கு மிகப்பெரிய ஜாக்பாட்..உங்க காட்டுல பண மழை தான்
சுக்கிரன் பெயர்ச்சி: ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டில் ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சுக்கிரனே எல்லா மனித உயிர்களுக்கும் காதலுக்கு காரணமாக இருப்பவர். காதலின் கிரகமாக கருதப்படும் சுக்கிர பகவான் ஜூன் 28 ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு செல்கிறார். பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார்.

திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள். அந்த வகையில், இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷப ராசி பலன்
கிருத்திகை 2, 3, 4 பாதங்களையும், ரோகிணி 1, 2, 3, 4 நட்சத்திர பாதங்களையும், மிருக சீரிஷம் 1, 2 ஆகிய 9 நட்சத்திர பாதங்களில் பிறந்தவர்கள் ரிஷப ராசிக்காரர்கள். அன்பு, பாசம், கருணை என்பது இயல்பாகவே இவர்களின் ரத்தத்தில் ஊறியிருக்கும். கலைத் துறை மீது அதிகமான ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். மிகுந்த தன்னம்பிக்கை, வைராக்கியம் மிக்கவர்களாக இருப்பார்கள். பொருளாதாரத்தில் தன்னிறைவை அடையக் கூடியவர்களாக இருப்பார்கள்.
எண்ணம் ஓங்கும்
இந்த சுக்கிரப் பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில் இருந்து உங்கள் ராசியிலேயே வந்து அமர்கிறார். ராசிநாதனான சுக்கிர பகவான் ஆட்சி பலம் பெற்று வலிமையாக இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் உங்கள் எண்ணங்கள் சிறப்பாக இருக்கும். தன வரவு அதிக அளவில் இருக்கும். நல்ல குடும்ப அமைப்பு உண்டாகும். வாக்கு வன்மை அதிகரிக்கும்.
நினைத்தது நடக்கும்
உங்களுயை சுய மரியாதை, மதிப்பு சமுதாயத்திலும், குடும்பத்திலும் அதிகரிக்கும். அதிகாரம் கைக்கு வரும். நினைத்த காரியங்கள் அனைத்தையும் செயல்படுத்தும் காலகட்டமாக இருக்கும். இதுவரை இருந்த வந்த தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். மனம், சிந்தனை, எண்ணங்கள் நல்லவிதமாக இருக்கும். கடந்த சில மாதங்களாக நிறைய விரையங்கள் ஏற்பட்டிருக்கும். இப்போது கால விரையம் என்பது குறையும்.
சொத்து வாங்கும் யோகம்
உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி அடையும் காலகட்டமாக இருக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சியாவதால் சூரியன் 4 ஆம் அதிபதியாக இருப்பதால் சுகத்தைப் பெருக்கிக் கொள்ளக்கூடிய ஆர்வம் அதிகரிக்கும். வீடு, வண்டி, வாகனம் வாங்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு அது சாத்தியமாகும் காலமாக இருக்கும்.
இடமாற்றம்
இடமாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற காலமாக இருக்கும். உத்தியோக மாற்றம், வேலை மாற்றம், இடமாற்றம் என அனைத்து மாற்றங்களும் நிறைவேறும் வாய்ப்புள்ளது. அரசு, அரசு சார்ந்த விஷயங்களில் நன்மை உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரம் உங்கள் கைக்கு வரும். சம்பள உயர்வு கிடைக்கும்.
முயற்சிகள் வெற்றி பெறும்
ஜூலை 7 ஆம் தேதி முதல் சந்திரன் நட்சத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் பெயர்ச்சி ஆகும்போது அம்மா சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவீர்கள். முயற்சிகள் அத்தனையும் வெற்றி பெறும். பயணங்கள் செய்யும் வாய்ப்பு உண்டாகும். அதன் மூலம் நன்மை பெறுவீர்கள். நண்பர்கள் மூலமாக ஆதாயம் பெறுவீர்கள். புதிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
கலைத் துறை
கலைத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இசை, பாட்டு, எழுத்து, பேச்சு சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு நல்லது நடக்கும் யோகம் உண்டாகும். நீங்கள் செயல்படும் துறையில் புகழ் பெறக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். உங்கள் தனித் திறமைகளை வெளிக்கொண்டு வருவீர்கள்.
வெளிநாடு வேலை
செவ்வாயின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்கும்போது அதாவது ஜூலை 20 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு நிறைய பேர் வெளிநாடு செல்வதற்கான எண்ணம் வரும். வெளிநாட்டு வேலைகள் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி துறையில் நுழைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கூட்டுத் தொழில் செய்வதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வீர்கள். கூட்டுத் தொழிலில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பீர்கள். நிறைய முதலீடு செய்யும் யோகமான காலகட்டமாக இருக்கும்.
கவனம்
சுக்கிரன் வலிமை பெற்றுள்ளதால் கடன்களை அதிக அளவில் வாங்காமல் இருப்பது நல்லது. வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். இருந்தாலும் அதனை சமாளிக்கக் கூடியதாக இருக்கும். அரசாங்கத் துறையில் வெற்றி பெறும் யோகம் உள்ளது. வேலை வாய்ப்பில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் யோகம் உண்டாகும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: தனுசு ராசிக்கு கட்டம் சரியில்லை.. வச்சு செய்யும் சனி, குரு.. ரொம்ப கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications