கடக ராசியினருக்கு 26 நாட்களில் 100% வரப்போகும் அதிர்ஷ்டம்.. விபத்துக்கு வாய்ப்புள்ளதால் ரொம்ப கவனம்
சுக்கிர பெயர்ச்சி: ஒவ்வொரு கிரகங்களும் சீரான இடைவெளியில் பெயர்ச்சி ஆகி கொண்டே இருக்கும். இது ஜோதிட ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த மாதம் ஏராளமான மாற்றங்களை கண்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 26 ஆம் தேதி இன்று சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். இது கடக ராசிக்கு கொடுக்கும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
சுக்கிரன் பகவான் வருகிற ஜூலை 26 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு அவர் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார். மிதுனத்தில் ஏற்கனவே குரு பகவான் உள்ளார். இந்த 26 நாட்கள் சுக்கிர பகவான், குருவுடன் இணைந்து பயணிக்க போகிறார். இதில் குரு - சுக்கிர இணைவும் நடக்கிறது.

அதிலும் சுக்கிர பகவான் ஜூலை 26-31 ஆகிய 6 நாட்கள் செவ்வாய் பகவானின் நட்சத்திரமான மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். ஆகஸ்ட் 1-11 தேதிகளில் சுக்கிரன் ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். ஆகஸ்ட் 12-20 குரு பகவானின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்க உள்ளார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக குரு பகவான் செல்வம், சுக ஸ்தானம், மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு அதிபதி. அதனால் சொசுகுசு வாழ்க்கைக்கு சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சுப கிரகங்களான குரு - சுக்கிரன் ஒன்றாக பயணிப்பதும் மிகவும் விஷேசமானது. இது 12 ராசிகளுக்கும் கொடுக்க போகும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக காணலாம். இந்த கட்டுரையில் கடகம் ராசிக்கான பலன்களை பார்க்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில்ல் சுக்கிரன் அமர்கிறார். அங்கு குருவோடு இணைவு பெற்று பலனைத் தரவுள்ளார். உங்கள் ராசிக்கு சுக்கிர பகவான் 4க்கு உரியவர். சுகத்தைக் கொடுக்கக் கூடியவர். வீடு, வண்டி, வாகனத்துக்கு காரணகர்த்தாவாக சுக்கிர பகவான் உள்ளார். சுக்கிரன் தற்போது 12 இல் அமர்ந்திருப்பதால் விரையம் ஏற்படும். ஆனால், அந்த விரையங்கள் சுப விரையமாக இருக்கும்.
உங்களுக்குத் தேவையானவற்றை ஆசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய காலகட்டமாக இருக்கும். 2 சுபர்கள் 12 ம் இடத்தில் இருப்பதால் 12 ஆம் இடம் வலுப்படும். தூக்கம் நன்றாக வரும். கடந்த 2 வருடங்களாக மனக்குழப்பம், சங்கடத்தில் இருப்பவர்களுக்கு அவை நீங்கும் காலகட்டமாக இருக்கும். வெளிநாடு, வெளிமாநிலம் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். வெளிநாட்டில் சென்று வேலை, வியாபாரம், தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று இருப்பவர்களுக்கு அந்த முயற்சிகள் வெற்றி பெரும்.
இடமாற்றம், பதவி உயர்வு
நீண்ட நாட்களாக இடமாற்றத்துக்கு காத்திருப்பவர்களுக்கு கட்டாய இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஏற்கனவே ஒரு வேலையில் இருப்பவர்கள் தங்களுடைய வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். குருவும், சுக்கிரனும் இணைந்து 6 ஆம் இடத்தைப் பார்ப்பதால் கடன் அமைப்பு உள்ளது. கடன் தேவைப்படுபவர்களுக்கு கடன் கிடைக்கும். கடனை வாங்கியிருப்பவர்கள் அதனை அடைக்க நினைப்பவர்கள் கடனை அடைப்பீர்கள்.
சுப கடன்கள்
கடன் வாங்கினால் அதனை சுப கடன்களாக மாற்றிக் கொள்வது நல்லது. வீடு, வாகனம், படிப்பு, திருமணம் போன்ற சுப விஷயங்களுக்காக கடன் வாங்குவது நல்லது. எதிர்ப்பு, பகை ஏற்படும். அதனை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிரி என்று தெரிந்தும் அதில் இருந்து விடுதலை ஆக முடியாமல் இருந்திருப்பீர்கள், இனி அதுபோன்ற சூழல்களில் இருந்து விடுதலை பெறுவீர்கள். குரு, சுக்கிரன் இணைந்துள்ளதால் பண விஷயங்களில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
எச்சரிக்கை
வெளிநாட்டு பணங்கள் வந்து சேரும். அல்லது அந்நிய நபர்களால், ஆன்மிகத்தால், பெரிய மனிதர்களின் தொடர்புகளால் பணம், ஆதாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உறவுகள் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குருவும், சுக்கிரனும் எதிர் தன்மை கொண்டவர்கள் என்பதால் எதிர் வாதங்களைச் செய்வீர்கள். ஆண்களாக இருந்தால் பெண்கள் சார்ந்த விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் சார்ந்த விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
வாகன விபத்து
ஜூலை 26 முதல் 31 ஆம் தேதி வரை மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பயணிப்பதால் குழந்தை பற்றிய சிந்தனை, குழந்தைகளுக்கு செலவு செய்வது, தொழில் பற்றிய சிந்தனை, தொழிலுக்காக செலவு செய்வது, தொழிலை விரிவுபடுத்துவது, அதற்கான கடன் வாங்குவது போன்ற சிந்தனைகள் அதிகரிக்கும். ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையில் ராகுவின் நட்சத்திரத்தில் பயணிப்பதால் வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
வழிபாடு
ஆகஸ்ட் 11 முதல் 20 ஆம் தேதி வரை குருவின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிப்பதால் நல்ல பாக்கியங்கள் கிடைக்கும். கடன் கிடைக்கும். வேலையை மாற்றுவது, பதவி உயர்வு, பயணங்கள், ஆன்மீகம் தொடர்பான சிந்தனைகள் ஓங்கும். விரைய ஸ்தானமாக இருந்தாலும் ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், எதிர்பாராத நன்மைகள், நல்ல மாற்றங்கள் கிடைப்பதற்கான யோகம் உண்டாகும். ஸ்ரீரங்கம் சென்று வழிபடுவது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்ல முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications