Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காசு பணம் துட்டு மணி மணி.. குரு சுக்கிரன் இணைவால் ரிஷப ராசிக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா

Subscribe to Oneindia Tamil

சுக்கிர பெயர்ச்சி: ஒவ்வொரு கிரகங்களும் சீரான இடைவெளியில் பெயர்ச்சி ஆகி கொண்டே இருக்கும். இது ஜோதிட ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த மாதம் ஏராளமான மாற்றங்களை கண்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 26 ஆம் தேதி இன்று சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். இது ரிஷப ராசிக்கு கொடுக்கும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

சுக்கிரன் பகவான் வருகிற ஜூலை 26 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு அவர் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார். மிதுனத்தில் ஏற்கனவே குரு பகவான் உள்ளார். இந்த 26 நாட்கள் சுக்கிர பகவான், குருவுடன் இணைந்து பயணிக்க போகிறார். இதில் குரு - சுக்கிர இணைவும் நடக்கிறது.

sukra-peyarchi-palan-for-rishabam-rishabam-taurus-rasi-people-will-get-unexpected-good-things

அதிலும் சுக்கிர பகவான் ஜூலை 26-31 ஆகிய 6 நாட்கள் செவ்வாய் பகவானின் நட்சத்திரமான மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். ஆகஸ்ட் 1-11 தேதிகளில் சுக்கிரன் ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். ஆகஸ்ட் 12-20 குரு பகவானின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்க உள்ளார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக குரு பகவான் செல்வம், சுக ஸ்தானம், மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு அதிபதி. அதனால் சொசுகுசு வாழ்க்கைக்கு சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சுப கிரகங்களான குரு - சுக்கிரன் ஒன்றாக பயணிப்பதும் மிகவும் விஷேசமானது. இது 12 ராசிகளுக்கும் கொடுக்க போகும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக காணலாம். இந்த கட்டுரையில் ரிஷப ராசிக்கான பலன்களை பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிநாதன் இருந்த சுக்கிரன் மிதுன ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசிக்கு தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்துக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகிறார். அங்கு ஏற்கனவே குரு பகவான் அமர்ந்துள்ளார். ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரையிலான 26 நாட்களுக்கு குருவும், சுக்கிரனும் இணைந்திருப்பார்கள். இந்த காலகட்டத்தில் பணத்தைக் கொடுக்கக்கூடிய இரண்டு கிரகங்கள் தன ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதாரத்தில் மேன்மை காண்பீர்கள்..

பண வரவு

அதிக அளவிலான பண வரவு கிடைக்கும். தொழில், வியாபாரம், வேலையில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான பண வரவு, லாபம் உண்டாகும். கையில் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால், பணத்தைக் கையாளுகின்ற விஷயத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. சுக்கிரன் ரிஷபத்துக்கு 6 க்கு உரியவராகவும், குரு 8க்கு உரியவனாகவும் இருப்பதால் வலி, வேதனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால். அபரிமிதமான பண வரவு ஏற்பட்டாலும், அதனை கையாளும் விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

சுப காரியம்

திருமண யோகம் கைகூடி வரும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். திருமணமான தம்பதிகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கணவன், மனைவிக்குள் எந்தவித பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பண வரவு இருக்கும். ஆனால், குடும்ப விஷயத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும் என்பதால் இணக்கமாகச் செல்வது நல்லது.

வீடு, வண்டி, வாகன யோகம்

வீடு, வண்டி, வாகனம் வாங்குவதற்கு நல்ல காலகட்டமாக இருக்கும். வீட்டை மாற்றுவது, வீட்டை புனரமைப்பது, வீட்டை அழகுப்படுத்துவது போன்றவற்றைச் செய்வீர்கள். கலைத் துறையில் இருக்கும் ரிஷப ராசியினருக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களை செய்வீர்கள். கலைத் துறை வாய்ப்புகள் தேடி வரும் சந்தர்ப்பம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம் வருவதற்கான வாய்ப்புள்ளது. எதிர்பார்க்காத வகையில் திடீர் பண வரவு உண்டாகும்.

ஆரோக்கியம்

வியாபாரம், தொழிலில் பணம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். குரு சுக்கிரன் இணைவு பெறுவதால் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. வயிறு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உணவு சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கை தேவை. சர்க்கரை தொடர்பான பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதனை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

திருமண பாக்கியம்

ஜூலை 26 முதல் 30 ஆம் தேதி வரை மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிப்பதால் சிலருக்கு திருமண பாக்கியம் உண்டாகும். திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற எண்ண உணர்வுகள் ஏற்படும். பயணங்கள் மேற்கொள்ளுவதற்கான யோகம் உண்டு. கணவன், மனைவி வெளிநாட்டுக்கு வேலை, தொழிலுக்காகச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஆகஸ்ட் 1 முதல் 11 ஆம் தேதி வரை ராகுவின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிப்பதால் பிரம்மாண்ட தன்மை ஏற்படும்.

வீடு வாங்கும் யோகம்

பெரிய வீடு, பிரம்மாண்ட வீடு கட்டுவீர்கள். சினிமா துறையில் வாய்ப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உங்களை வெளியுலகிற்கு காண்பிக்கும் செயலைச் செய்வீர்கள். சின்னத்திரை, பெரிய திரை தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். பெண்களாக இருந்தால் ஆண்கள் சார்ந்த விஷயத்திலும், ஆண்களாக இருந்தால் பெண்கள் சார்ந்த விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது.

வழிபாடு

ஆகஸ்ட் 11 முதல் 20 ஆம் தேதி வரை புனர்பூசம் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்கிறார். லாபம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள், எதிர்பார்க்காத விஷயங்கள் போன்றவை நடக்கும் காலகட்டமாக அமையும். வீட்டுக்குத் தேவையான விஷயங்கள், உங்களுக்கு தேவையான விஷயங்களை செய்வீர்கள். ஸ்ரீரங்கம் சென்று வருவது அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேன்மையை ஏற்படுத்தும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+