சுக்கிரன் பெயர்ச்சி.. சிம்மத்தில் வக்ரமடையும் சுக்கிரன்.. கடகத்திற்கு செல்வதால் யாருக்கு ஜாக்பாட்
சென்னை: காதல் கிரகமான சுக்கிரன் சிம்ம ராசியில் செவ்வாயுடன் பயணம் செய்யும் இந்த நேரத்தில் வக்ரமடையப்போகிறார். ஆடி மாதம் 7ஆம் தேதி ஜூலை 23 முதல் ஆவணி 18 வரை அதாவது செப்டம்பர் 4ஆம் தேதி வரை வக்ரமடைகிறார். ஆகஸ்ட் 7ஆம் தேதி கடக ராசிக்கு வக்ர நிலையில் செல்லும் சுக்கிரனின் பயணத்தால் சில ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது.
சுக்கிரன் வக்ர பெயர்ச்சி: சுக்கிரன் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர். அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார். சுக்ரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. சுக்ரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். சுக்கிரன் வக்ரமடையும் காலத்தில் சில ராசிக்காரர்களுக்கு யோகமான பலன்கள் நடைபெறும்.

மேஷம்: சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5வது வீட்டில் செவ்வாயுடன் பயணம் செய்கிறார். பூர்வீக சொத்து பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகள் மூலம் சுப காரியங்கள் அதிகரிக்கும். சுக்கிரன் பின்னோக்கி வக்ரமடைந்து மீண்டும் கடக ராசிக்கு செல்லப்போவதால் திடீர் அதிர்ஷ்டமும் சொத்து சேர்க்கையும் ஏற்படும். பண வருமானம் அதிகரிக்கும் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆடம்பர பொருட்கள் சேரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும். செப்டம்பர் 4 வரை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாம். வீடு வாகன கடன் வாங்க வங்கியில் அப்ளை செய்யலாம். கடன் கிடைக்கும்.
மிதுனம்: தன ஸ்தானத்திற்கு வரப்போகும் சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையேயான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் வரமாக கிடைக்கும். பேச்சில் இனிமை கூடும். குடும்பத்தினரோடு அதிக நேரம் செலவு செய்வீர்கள். உறவினர்கள் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களின் பொருளாதார நிலை உயரும்.
கடகம்: சுக்கிரன் வக்ரமடைந்து பயணம் செய்யும் காலத்தில் உங்களுக்கு திடீர் ஜாக்பாட் மூலம் பண வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும். பெண்கள் தங்க நகைகள் வாங்கலாம். சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சுகமான காலகட்டமாக அமைந்துள்ளது.
கன்னி: காதல் மலரும் காலம் இது. திருமண வாழ்க்கையில் உற்சாகமாக இருப்பீர்கள். பண வருமானம் அதிகாிக்கும். வண்டி வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் சுக்கிரனால் அரசனுக்கு இணையான அதிர்ஷ்டம் தேடி வரும்.
துலாம்: வேலை தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி செய்யும் இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. உயரதிகாரிகளிடம் பேசும் போது அமைதியாகவும் நிதானமாகவும் பேசவும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். ராஜாதி ராஜயோகம் தேடி வரப்போகிறது. மனதளவிலும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள்.
மீனம்: காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வக்ர நிலையில் பயணம் செய்யப்போகிறார். பணவருமானம் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது அன்பு மழை பொழியும் நேரமிது. காதலர்களுக்கு இடையே நெருக்கம் கூடும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications