Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு ஏழரை சனி அச்சம் வேண்டவே வேண்டாம்.. இனி கொட்டும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு பலன்: தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வரவுள்ளது. வரும் புத்தாண்டு புதுமைகளைத் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவருடைய ஆசையாகவும் இருக்கும். அந்த வகையில், மேஷ ராசிக்காரர்களுக்கு வரும் தமிழ் புத்தாண்டில் என்ன மாதிரியான நற்பலன்கள் கிடைக்கும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் துல்லியமாகப் பார்க்கலாம்.

தமிழ்ப் புத்தாண்டை ஏராளமான மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்தப் புத்தாண்டு மாற்றங்களைத் தரக் கூடியதாகவும், முன்னேற்றம் மிக்கதாவும் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். வருட கிரகங்கள் என்று சொல்லக்கூடிய குரு சனி ராகு கேதுவின் பெயர்ச்சியை வைத்துதான் இந்த புத்தாண்டு பலன்கள் கணிக்கப்படுகின்றன.

tamil-new-year-lets-take-a-look-at-the-good-benefits-and-yogas-that-aries-people-will-get-in-the-t

புராதன காலகட்டத்தில் அப்போது வாழ்ந்த சித்தர்கள் எழுதி வைத்த பாடல்களைப் பொருத்துதான் அந்த வருடத்தின் முழு வெண்பாவும் அமையும் என்பதை பொதுப் பலன்கள் என்று கூறுவோம். அந்த அடிப்படையில் இந்த ஆண்டு விசுவாசுவ வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது. இந்த வருடத்தில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும். அதேபோல, இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும்.

மேஷ ராசி பலன்

அந்த வகையில், மேஷ ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில் கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேஷம்: மேஷ ராசியினரும் ஒருவர். ஏழரை சனி ஆரம்பித்துள்ள நிலையில் கலக்கத்தோடு இருக்கின்றனர். மேஷ ராசிக்காரர்களைப் பொருத்தவரை சனி பகவானை நினைத்து நீங்கள் அச்சப்படத் தேவையில்லை. ராசியில் சனி பகவான் வரும்போது அவர் நீச்சமடைகிறார். செவ்வாயின் வீட்டில் சனி வந்தால் அவர் தன்னுடைய பலத்தை இழப்பார்.

ஏழரை சனி

மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் பெரிதளவில் இருக்காது. குருவின் வீட்டில் முதல் இரண்டரை வருடம் சனி பகவான் இருக்கப் போகிறார். அதற்கடுத்து ஜென்மத்துக்கு வரும் சனி பகவான் செவ்வாய் வீட்டில் வரும்போது நீச்சமடைந்து பலவீனமடைகிறார். அதனால், முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மேஷ ராசியினருக்கு ஏழரை சனியால் எந்தவித பெரிய தாக்கமும் ஏற்படாது.

மாற்றம், மகிழ்ச்சி

மேஷ ராசிக்காரர்களுக்கு மாற்றத்தையும், சந்தோஷத்தையும் தரக்கூடிய காலகட்டமாகத்தான் இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு பகாவன் மேஷ ராசியின் மூன்றாவது இடத்தில் மறைகிறார். குரு பகவான் முதல் பார்வையாக ஏழாம் இடத்தைப் பார்ப்பதால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் இருந்து வந்த தடைகள் நீங்கும். விரும்பிய பெண்ணை திருமணம் செய்யும் யோகம் உண்டாகும்.

காதல் இனிக்கும்

காதல் மலர்ந்தே தீரும் காலகட்டமாக இருக்கும். காதலில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் எல்லாம் நீங்கி ஒன்று சேரக்கூடிய வாய்ப்பு ஏற்படும். பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேரக்கூடிய நேரம் வரும். மே மாதம் 11 ஆம் தேதிக்குப் பிறகு திடீர் யோகம், திடீர் அதிர்ஷ்டம் கண்டிப்பாக வரும். பெரிய முதலீடுகளைச் செய்தவர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும். முதலீடுகளில் பன்மடங்கு லாபம் கட்டாயம்.

பண வரவு அதிகரிக்கும்

11 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் பண வரவு அபரிமிதமாக இருக்கும். பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தரும் காலகட்டம். 5 ஆவது இடத்தில் கேது வருவதால் பிள்ளைகள் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லாவிட்டால் அவர்களால் அசிங்கம், அவமானம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

நீதி நேர்மை ரொம்ப முக்கியம்

சனி ஏற்படக்கூடிய காலகட்டத்தில் நீதியோடும், நேர்மையோடும் செயல்படுத்துவது நல்லது. மனசாட்சிக்கு தப்பு என்று நினைக்கிற விஷயத்தை தவிர்ப்பது நல்லது. சரியில்லாத விஷயத்தை செய்வது கட்டாயம் கஷ்டத்தை ஏற்படும். தேவையற்ற விரைய செலவுகள் ஏற்படும். செலவுகள் அனைத்தையும் சுப விரையமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.

கவனம் கவனம்

வாக்கு கொடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது. கோப்புகள் சார்ந்த விஷயங்களை கவனமாக கையாள வேண்டும். கிரெடிட் கார்டு விஷயங்களில் சிக்காமல் இருப்பது நல்லது. ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடாமல் இருப்பது நல்லது. முதலில் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுப்பதுபோல கொடுத்து தரையில் தள்ளிவிடும். எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு சூப்பர்

மூன்றாவது நபர்களை நம்பி முக்கிய முடிவு பொறுப்புகளை ஒப்படைக்க கூடாது. ரத்த உறவுகளிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. நண்பர்களுக்குள் பிரச்சனைகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. மிகவும் நிதானமாக இருப்பது நல்லது. மாணவர்களைப் பொருத்தவரை நல்ல எதிர்காலம் உண்டாகும். விரும்பிய துறைகள் கிடைக்கும்.

வெளிநாடு யோகம்

12 இல் சனி வருவதால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். விசா, பிஆர் கிடைக்கும். வேற்று மொழி, வேற்று மாநிலத்தில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய பொற்காலம் உண்டாகும்.

மதிப்பெண்

மேஷ ராசியினரைப் பொருத்தவரை 100க்கும் 75 சதவீதம் நன்மையை தரும் விதமாக இருக்கும். மாற்றம் முன்னேற்றத்தை தரும் ஆண்டாக இருக்கும்.

பரிகாரம், வழிபட வேண்டிய தெய்வம்

சக்திக்கேற்ப ஆத்மார்த்தமாக தானங்கள் செய்வது நல்ல பலன்களைத் தரும். சிவபெருமானின் ஆலயத்துக்குச் சென்று சனி பிரதோஷத்தில் வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். நவதானிய பிரசாதங்களை தானமாக கொடுப்பது நன்மை பயக்கும். ஏழை மாணவ, மாணவிகளுக்கு படிப்புக்கான உதவிகளைச் செய்யலாம். வில்வ மாலை வாங்கித் தருவது, அருகம்புல்லை நந்தியம்பெருமானுக்கு வாங்கி போடுவது நல்லது. பிரதோஷ தினத்தில் ஒரு படி பால் வாங்கி கொடுப்பது அருமையான சுபிக்ஷத்தை கொடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+