Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் புத்தாண்டு பலன்: மீனம் ராசிக்கு தொழிலில் வெற்றி, லாபம் கொட்டும்.. காதல் விஷயத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு பலன்: தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வரவுள்ளது. வரும் புத்தாண்டு புதுமைகளைத் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவருடைய ஆசையாகவும் இருக்கும். அந்த வகையில், மீன ராசிக்காரர்களுக்கு வரும் தமிழ் புத்தாண்டில் என்ன மாதிரியான நற்பலன்கள் கிடைக்கும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் துல்லியமாகப் பார்க்கலாம்.

தமிழ்ப் புத்தாண்டை ஏராளமான மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்தப் புத்தாண்டு மாற்றங்களைத் தரக் கூடியதாகவும், முன்னேற்றம் மிக்கதாகவும் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். வருட கிரகங்கள் என்று சொல்லக்கூடிய குரு, சனி, ராகு கேதுவின் பெயர்ச்சியை வைத்துதான் இந்த புத்தாண்டு பலன்கள் கணிக்கப்படுகின்றன.

Meenam Tamil puthandu rasi palan

புராதன காலகட்டத்தில் அப்போது வாழ்ந்த சித்தர்கள் எழுதி வைத்த பாடல்களைப் பொருத்துதான் அந்த வருடத்தின் முழு வெண்பாவும் அமையும் என்பதை பொதுப் பலன்கள் என்று கூறுவோம். அந்த அடிப்படையில் இந்த ஆண்டு விசுவாசுவ வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் தொடங்குகிறது.

இந்த வருடத்தில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும். அதேபோல, இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், மீன ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில் கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மீனம்: மீன ராசிக்காரர்களைப் பொருத்தவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலவிதமான பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள். இனிவரும் காலங்களில் மிகச்சிறந்த பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வருடத்தின் முதலில் வரக்கூடிய ராகு கேது பெயர்ச்சி அபரிமிதமான பலன்களை தரப் போகிறது. ராசியில் இருந்து ராகு விழுவது சிறையில் இருந்து விடுதலையைப் பெறும் உணர்வைப் பெறுவீர்கள். இழந்தவற்றை எல்லாம் பெறும் யோகம் உண்டாகும்.

கணவன், மனைவிக்குள் பெரும் பிரச்சனையை சந்தித்து வந்திருப்பார்கள். அந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். காதல் திருமணங்கள் கைகூடி வரும். சனி பகவான் 7 ஆம் இடத்தைப் பார்ப்பதால் புதிய உறவுகள் கிடைப்பார்கள். மூன்றாவது இடத்தில் மறைந்திருந்த குரு மே 11 ஆம் தேதிக்குப் பிறகு 4 ஆவது இடத்துக்குப் போகிறார். 4 இல் குரு வரும்போது புதிய வீடு கட்டி குடியேறும் வாய்ப்பு உண்டாாகும்.

மே 11 ஆம் தேதிக்குப் பிறகு இடமாறுதல்கள் ஏற்படும், வேலை, வீடு, தொழில், வண்டி, வாகனம் மாற்றக்கூடிய யோகம் உண்டாகும். வீடு வாங்குவது, புதிய வேலை வாய்ப்பு கிடைப்பது, பதவி உயர்வு பெறுவது, தொழில் தொடங்குவது போன்ற யோகங்கள் வரும். அண்ணன் தம்பிக்குள் இருந்து வந்த சண்டைகள் அனைத்தும் நீங்கும்.

நண்பர்களால் மீன ராசிக்காரர்கள் பழிவாங்கப்பட்டிருப்பார்கள். அந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். தங்களுக்குளேயே தாழ்வு மனப்பான்மையுடன் இருந்திருப்பீர்கள். எல்லாம் இருந்தும் சில விஷயங்களை செய்ய முடியாமல் தவித்து வந்திருப்பீர்கள். இனி அந்த பிரச்சனைகள் எல்லாம் மறையும். தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். மிகப்பெரிய தன வரவு உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். ஜென்ம சனி வந்தால் மீன ராசியை விழிப்பு நிலையிலேயே வைத்திருப்பார். எல்லா வகையான புரிதலும் உண்டாகும். நினைத்து பார்க்காத வளர்ச்சி உண்டாகும். கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். உடல் ரீதியாக இருந்து வந்த உபாதைகள் தீரும். பிள்ளகைளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சுப காரியங்கள் நடக்கும் யோகம் உண்டு. சுப மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும்.

வாராகடன் வசூலாகும் காலகட்டம். கடன் சுமைகளை படிப்படியாக அடைப்பீர்கள். லோன் கிடைக்காதவர்களுக்கு வங்கியில் இருந்து தானாக லோன் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். ஏழரை சனி ஆரம்பித்ததில் இருந்து 3 வருடமாக எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்று நினைப்பவர்களுக்கு அனைத்துமே திரும்ப கிடைக்கும். புதிய பட்டம், புதிய பொறுப்பு, புதிய பதவி வந்து சேரும்.

12 ஆவது இடத்தை குரு பார்ப்பதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். அடுத்த 18 மாதத்தில் வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டு பயணம் செய்வீர்கள். வேற்று மொழி, வேற்று மதத்தை சார்ந்தவர்களுடன் பழகக்கூடிய சூழல் ஏற்படும். தூர தேச பிராயணம், கடல் கடந்து வாணிபம் செய்யக்கூடிய வாய்ப்பு வரும். இந்த பயணம் அனைத்தும் சாதகமான பயணமாக இருக்கும். விரைய செலவுகள் கட்டுக்குள் வரும். தெய்வ அனுகூலம் நிறைந்த ஆண்டாக இருக்கும்.

எச்சரிக்கை

ஜென்ம சனி வருவதால் உடல் சோர்வு, மன சோர்வு ஏற்படும். எலும்பு, நரம்பு சம்பந்தமான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அதீத சிந்தனைகள் இருக்கக் கூடாது. சனி பகவான் ஏழாம் இடத்தைப் பார்ப்பதால் புதிய நபர்களிடம் பேசும்போது, பழகும்போது கவனமாக இருக்க வேண்டும். காதலால் ஆறாத காயம் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது. யோசித்து முடிவு எடுப்பது நல்லது. உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். யார் மேலும் அதீத அன்பு, பாசம் வைக்காமல் இருப்பது நல்லது. விட்டுக் கொடுத்து போகும் மனப்பான்மையை உருவாக்கி கொள்ள வேண்டும்.

பெண்கள், மாணவர்கள்

பெண் பிள்ளைகளுக்கு உடல்நலனில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். மாதவிடாய், வயிறு, அசிடிட்டி, அல்சர் போன்ற அனைத்து பிரச்சனைகள் அனைத்தும் சீராகும். தொழில் செய்யும் பெண்களுக்கு புதிய கிளைகள் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது. வாரா கடன்கள் திரும்ப வந்து சேரும். கூடுதல் தொழில் செய்வதற்கான வாய்ப்புள்ளது. சாதிக்கக்கூடிய வருடமாக இந்த வருடம் உங்களுக்கு இருக்கும்.

மாணவர்களுக்கு பாசிட்டிவான வருடமாக இருக்கிறது. ராகு விலகியுள்ளதால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். இனி தெளிவான முடிவை எடுப்பார்கள். மனத் தெளிவு உண்டாகும். விரும்பிய துறை, கல்லூரிகளில் சேரும் வாய்ப்புள்ளது. போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு வெற்றி பெறுவதற்கான வாயப்பு உண்டாகும்.

மதிப்பெண்

மீன ராசிக்காரர்களுக்கு ராகு கேது விலகுவதால் நல்ல பலன்களைத் தரும். 100க்கு 80 சதவீதம் நல்ல அமைப்பாக இருக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரம்

குரு பகவானுக்குரிய வீடு மீனம் என்பதால் சனிப்பிரதோஷ வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும். சிவபெருமான் ஆலயங்களுக்குச் சென்று பிரதோஷத்தன்று வில்வ மாலை, ஒரு படி பால் அபிஷேகத்திற்கு கொடுக்கலாம். சனிக்கிழமைகளில் சிவாலயத்துக்குச் சென்று நவக்கிரகத்தில் 9 அகல்தீபத்தை ஏற்றி வழிபடுவது நல்லது. பிரகாரத்தை மூன்று முறை வலது இடது புறமாக சுற்றி வருவது நல்லது. தானம் அளிப்பது அருமையான பலன்களைத் தரும். வயதானவர்களுக்கு ஒரு படி அரிசி தானமாக கொடுக்கலாம். மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு உதவி செய்வது செழிப்பைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+