தமிழ் புத்தாண்டு பலன்: சிம்ம ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு பணம் கொட்டும்.. காதல், இல்லறத்தில் கவனம்
தமிழ் புத்தாண்டு பலன்: தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வரவுள்ளது. வரும் புத்தாண்டு புதுமைகளைத் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவருடைய ஆசையாகவும் இருக்கும். அந்த வகையில், சிம்ம ராசிக்காரர்களுக்கு வரும் தமிழ் புத்தாண்டில் என்ன மாதிரியான நற்பலன்கள் கிடைக்கும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் துல்லியமாகப் பார்க்கலாம்.
தமிழ்ப் புத்தாண்டை ஏராளமான மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்தப் புத்தாண்டு மாற்றங்களைத் தரக் கூடியதாகவும், முன்னேற்றம் மிக்கதாவும் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். வருட கிரகங்கள் என்று சொல்லக்கூடிய குரு சனி ராகு கேதுவின் பெயர்ச்சியை வைத்துதான் இந்த புத்தாண்டு பலன்கள் கணிக்கப்படுகின்றன.

புராதன காலகட்டத்தில் அப்போது வாழ்ந்த சித்தர்கள் எழுதி வைத்த பாடல்களைப் பொருத்துதான் அந்த வருடத்தின் முழு வெண்பாவும் அமையும் என்பதை பொதுப் பலன்கள் என்று கூறுவோம். அந்த அடிப்படையில் இந்த ஆண்டு விசுவாசுவ வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது.
இந்த வருடத்தில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும். அதேபோல, இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், சிம்ம ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில் கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்மம்: சிம்மம் ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி ஆரம்பமாகிறது. ஆனாலும் பெரிய ஆபத்துகளை உண்டாக்காது. சனி பகவான் சிம்ம ராசிக்கு 8 ஆவது வீடான குரு வீட்டில் மறைவதால் புனிதப்படுவார். சிம்ம ராசிக்காரர்களுக்கு புனிதப் பலன்களை சனி பகவான் வழங்கப் போகிறார். கடந்த ஒரு வருடமாக 10 இல் இருந்த குரு பகவான் 11 ஆம் இடத்துக்கு வருகிறார்.
பண வரவு சூப்பர்
11 இல் குரு வருவதால் பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். பணப் பிரச்சனைகளால் கடும் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு நிதி விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அலட்சியப்படுத்தியவர்கள் உங்களை அங்கீகரிக்கும் சூழல் ஏற்படும். பதவி உயர்வுகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். இனி சந்தோஷமான காலகட்டமாக இருக்கும்.
முயற்சிகளில் வெற்றி
வாக்கு வன்மை அதிகரிக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை உண்டாகும். அலட்சியப்படுத்தியவர்கள் தூக்கி வைத்து கொண்டாடும் காலமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். எத்தனை அரியர் இருந்தாலும் அதனை கிளியர் செய் வீர்கள். 3 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் புதிய முயற்சிகளை துணிவோடு தொடங்குவீர்கள்.
தொழில் தொடங்கும் யோகம்
பணம், திறமை, ஆட்கள் இருந்தும் செயல்படுத்த முடியாமல் கடந்த 4 ஆண்டுகளாக திணறியிருப்பீர்கள். இனிமேல் எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். துணிச்சலாக முடிவெடுத்து வெற்றி காண்பீர்கள். அதிர்ஷ்டமான காலகட்டமாக இருக்கும். சகோதரர்களுடன் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் தீரும். பிரிந்த நண்பர்கள் ஒன்றாக சேர்வார்கள். வலியைக் கொடுத்தவர்கள் மன்னிப்பு கேட்பார்கள்.
சிக்கல்கள் தீரும்
5 ஆம் வீட்டை குரு பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வ புண்ணியங்களால் பெரிய அனுகூலங்கள் ஏற்படும். தெய்வ நடமாட்டத்தை உணர்வீர்கள். ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சிம்ம ராசியினர் சொன்னது பழிக்கும். எந்த வேலைகளை செய்தாலும் வெற்றி உண்டாகும். காதலில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். நிறைய நம்பிக்கை துரோகத்தை சந்தித்திருப்பார்கள். இனி அந்த சிக்கல்கள் எல்லாம் தீரும். பிரிந்தவர்கள் எல்லாம் ஒன்று கூடுவார்கள்.
எச்சரிக்கை
இல்லற வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிரச்சனை, பிரிவு உண்டாவதற்கான வாய்ப்பு உண்டாகும். கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மூன்றாம் நபர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லதல்ல. யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டம்
சிம்ம ராசிக்கு குரு 11 ஆம் இடத்துக்கு செல்வதால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராதா பண வரவு, அதிர்ஷ்டம் உண்டாகும். துணிவோடு பல முதலீடுகளை செய்யும் காலகட்டமாக இருக்கும். நிலம் சார்ந்த விஷயங்களில், விவசாயம் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னற்றம் ஏற்படும். காதல் உறவுகள், கணவன் மனைவி அந்தரங்க விஷயங்களை பிறரிடம் சொல்வதை தவிர்ப்பது நல்லது. முதல் ஒரு வருடம் எந்த பாதிப்பும் ஏற்படாது. முன்னற்றத்தை தரும் காலகட்டமாக இருக்கும்.
மதிப்பெண்
ராசியில் கேது இருப்பதால் உடல்நிலை பாதிக்கப்படும். எண்ணங்களில் தடுமாற்றம் ஏற்படும். புதிய உறவுகளால் சிறு சிறு சில சிக்கல்கள் ஏற்படும். சிம்மம் ராசிக்காரர்களுக்கு 100க்கு 85 சதவீதம் நன்மைகள் கிடைக்கும். 25 சதவீதம் கெடுபலன்களும் உண்டாகும்.
வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரம்
சிவபெருமானை வழிபடு நன்மை பயக்கும். திருவண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் வருவது நல்ல பலன்களைத் தரும். சிக்கல்கள், பாதிப்புகளை நீக்கும். யாசகம் கேட்பவர்களுக்கு சாப்பாடு தானமாக அளிப்பது பெரிய பலனைத் தரும். பார்வையற்ற குழந்தைகளுக்கு உதவி செய்வது சனியின் பாதிப்பை குறைக்கும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications