ஒவ்வொரு அடியையும் பார்த்து வையுங்க.. ரொம்ப கவனம்.. 2024 தமிழ் புத்தாண்டு பலன்! இந்த ராசிக்கு சிக்கல்
சென்னை: இன்று பிறக்கும் தமிழ் புத்தாண்டில் மகர ராசிக்கு என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும்.. அடுத்த 1 வருடம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
தமிழ் புத்தாண்டு பொதுவாக பல்வேறு ராசிகளுக்கு வாழ்க்கையை புரட்டி போடும். அதுவும் மகர ராசிக்கு இந்த முறை தமிழ் புத்தாண்டில் பல மாற்றங்கள் ஏற்படும்.

பொதுவாக தமிழ் வருடங்கள் பிறக்கும் போது கிரகங்களின் நிலை பொறுத்து உங்களின் வாழ்க்கை பெரிய அளவில் மாற்றங்கள் அடையும். தமிழ் வருடங்கள் மொத்தம் 60 வருடங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த 60 வருடங்கள் மாறி மாறி சுழற்சியில் வருவது வழக்கம். இதில் முப்பத்தெட்டாவது வருடமான குரோதி வருடம்தான் இப்போது பிறக்க போகும் வருடம். இந்த புத்தாண்டில் கேது, ராகு, சுக்கிரன் சஞ்சரிக்கும் இடங்களை பொறுத்து உங்களின் பலன் மாறும்.
இந்த புதிய ஆண்டில் மகர ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய விஷயங்கள் : உங்கள் உடல் ஆரோக்கியம் கெடும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.
உங்கள் ராசிக்கு புத்திர ஸ்தானத்தில் வருகிறார். ஆனால் இதனால் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் உங்களுக்கு பின்வரும் பாதக பலன்கள் ஏற்படும்.
அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். அண்ணன் - தம்பி உறவில் சிக்கல் ஏற்படலாம். அதனால் கவனமாகம் யோசித்து பேசுங்கள் .வயிற்று பிரச்சனைகள் அதிகரிக்கலாம். திடீர் மயக்கம் ஏற்படலாம். கிட்னி பிரச்சனை ஏற்படலாம்.
அகலக்கால் வைக்க வேண்டாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும். மன நலனில் பிரச்சனை ஏற்படலாம்; உங்களுக்கு அதே சமயம் மன நலனில் பிரச்சனை வரலாம். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம்.
மகர ராசிக்காரர்களுக்கு நடக்க போகும் நல்ல விஷயங்கள்; புதிய வீடு கட்டும் வாய்ப்பு வரும்., நிலம் வாங்கும் யோகம் அடிக்கும். சொத்துக்களுக்கு அதிபதி ஆகும் வாய்ப்பு தேடி வரும் . எதிர்காலத்தை புரட்டி போடும் அந்த ஒரு சம்பவம் கண்டிப்பாக நடக்கும். அதாவது திருமணத்திலோ, வேலையிலோ நீங்கள் எதிர்பார்க்காத பெரிய மாற்றம் நடந்து உங்கள் எதிர்காலத்தையே புரட்டி போடும்.
இரண்டாவது குழந்தைக்கு முயல்பவர்களுக்கு இரண்டாம் குழந்தை கிடைக்கும். திருமணம் கைகூடும். இத்தனை காலம் பல வரங்களை தேடி இருப்பீர்கள். ஏதாவது ஒரு பெண் - ஆண் அமையாதா என்று பார்த்து இருப்பீர்கள். ஆனால் இப்போது நீங்கள் தேடாமலே உங்களுக்கு திருமணம் கைகூடும்.
உங்கள் ராசிக்கு புத்திர ஸ்தானத்தில் வருகிறார். அதனால் உங்களுக்கு பின்வரும் சாதக பலன்கள் ஏற்படும். உங்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். இத்தனை காலம் குழந்தை இல்லாமல் போனவர்களுக்கு குழந்தை பிறப்பு ஏற்படும். மிக மோசமான பொருளாதார சூழ்நிலை, கழுத்தை நெறிக்கும் கடன், குழந்தைகள் வாழ்க்கையில் பிரச்சனை என்று பல பிரச்சனைகளில் இருந்த உங்களுக்கு பிரச்சனைகள் தீர போகிறது.
பரிகாரம்; குலதெய்வத்திடம் சரண்டர் ஆகுங்கள். குலதெய்வ கோவிலுக்கு பூஜை செய்யுங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications