Tamil Puthandu Palan: மிதுனம் ராசிக்கு அதிரடி மாற்றங்கள்!.. 2026 தமிழ் புத்தாண்டு பலன் முழு விவரம்
தமிழ் புத்தாண்டு பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைவரும் தங்களின் வரவிருக்கும் ஆண்டின் பலன்களை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள். அந்த வகையில், இந்த ஆண்டு மிதுனம் ராசியினர் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நடக்கும்? தொழில், பணம், உடல்நலம், குடும்பம், காதல், திருமணம் போன்ற முக்கிய அம்சங்களில் ஏற்படும் முன்னேற்றம், சவால்கள் குறித்தது இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 8.42 மணிக்கு சதயம் நட்சத்திரத்தில் தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) பிறக்கிறது. மிதுனத்தில் சூரியன் வரக்கூடிய நாளே சித்திரை 1 ஆம் நாள். விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து பராபவ ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த ஆண்டில் 12 ராசிகளுக்கும் கிரக நிலைகளின் அடிப்படையில் பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)
மிதுனம் ராசியினருக்கு மகிழ்ச்சியான ஆண்டாக இந்த ஆண்டு அமையும். அற்புதமான காலகட்டமாக இருக்கும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டு. பைல்ஸ் போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். மருத்துவமனையில், ஆயுர்வேதிக், மசாஜ் போன்ற சிகிச்சைகளை ஒருநாள், இரண்டு நாள் தங்கி எடுத்துக் கொண்டு வருவீர்கள்.
சுற்றுலா
நிறைய சுற்றுலா செல்லக்கூடிய அமைப்பு உள்ளது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு நன்றாக இருக்கும். வீடுமாற்றம், இடமாற்றம், வேலை இழப்பு, ஏமாற்றம் போன்ற நிலைமைகள் எல்லாம் மாறி கொடிகட்டிப் பறக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். பெண்களுக்கு படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம் கிடைக்கும் யோகம் உள்ளது. பெரிய கெளரவங்கள் ஏற்படும்.
அனுகூலம்
தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் தீரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். எல்லா விஷயங்களிலும் அனுகூலம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும். காது, மூக்கு, தொண்டை, அசிடிட்டி தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.
வெற்றி மேல் வெற்றி
புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதன் மூலமாக நல்ல வருமானத்தைகப் பெறுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நல்ல காலகட்டம். சமயோஜித புத்தியால் தக்க நேரத்தில் சரியான முடிவை எடுப்பீர்கள். அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். கடினமான வேலைகளை சரியாகத் திட்டமிட்டு முடிப்பீர்கள். மேலதிகாரிகள் உங்களிடம் நட்புடன் நடந்துகொள்வார்கள். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பண வரவிற்கு எந்தக் குறைவும் இருக்காது.
வார்த்தையில் கவனம்
கூடாநட்பில் கவனமாக இருக்க வேண்டும். இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவது நல்லது. இல்லையெனில் பேச்சினால் பிரச்சனைகள் வரக்கூடிய அமைப்பு உள்ளது. வார்த்தைகளில் கவனம் தேவை. ரத்த அழுத்தம், சர்க்கரை, இதயம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ரத்த ஓட்டம் நன்றாக உள்ளதா என்று பரிசோதித்துக் கொள்வது நன்மை பயக்கும். பட்டீஸ்வரம் துர்க்கை வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
மேஷம் ராசிக்கு பராபவ வருடம் அதிர்ஷ்டமா?.. 2026 தமிழ் புத்தாண்டு பலன் முழு விவரம்! -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. சொத்து விஷயத்தில் கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: தனுசு ராசிக்கு அஷ்டமசனியிலும் அதிர்ஷ்டம்.. பிரச்சனைகள் பறந்துபோகும் நேரம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிகம் ராசிக்கு கோடியில் புரளும் யோகம்.. அள்ளிக் கொடுக்கும் குரு பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: மிதுன ராசிக்கு தொழில், பணத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. பேச்சில் தான் பிரச்சனையே -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி..எந்த விஷயங்களில் கவனம் தேவை -
தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. வேற லெவல் முன்னேற்றம் கன்ஃபார்ம் -
Mesham: மேஷம் ராசிக்கு புத்தாண்டில் வரப்போகும் அற்புதமான மாற்றங்கள்.. இதை மட்டும் கடைப்பிடிங்க -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications