தமிழ் புத்தாண்டு பலன்: மீன ராசிக்கு ஜென்ம சனியிலும் ஜாக்பாட்.. அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு
தமிழ் புத்தாண்டு பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அனைவரும் தங்களின் வரவிருக்கும் ஆண்டின் பலன்களை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள். அந்த வகையில், இந்த ஆண்டு மீனம் ராசியினர் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நடக்கும்? தொழில், பணம், உடல்நலம், குடும்பம், காதல், திருமணம் போன்ற முக்கிய அம்சங்களில் ஏற்படும் முன்னேற்றம், சவால்கள் குறித்தது இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 8.42 மணிக்கு சதயம் நட்சத்திரத்தில் தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) பிறக்கிறது. மீனத்தில் சூரியன் வரக்கூடிய நாளே சித்திரை 1 ஆம் நாள். விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து பராபவ ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த ஆண்டில் 12 ராசிகளுக்கும் கிரக நிலைகளின் அடிப்படையில் பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மீனம் ராசி பலன் (Meenam Rasi Palan)
மீனம் ராசியினருக்கு ஜென்மசனி நடந்து கொண்டிருக்கிறது. திருமணம், தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு போன்றவற்றில் இருந்த தடைகள் எல்லாம் நீங்கும். அடுத்தடுத்து முன்னேற்றங்கள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். ஜென்ம சனியில் குடும்பத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும்.
கனவுகள் நிறைவேறும்
பெற்றோர், பெரியோரின் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அஷ்டலட்சுமி கடாட்சம் உண்டாகும். பண வரவு அபரிமிதமானதாக இருக்கும். வாகனத்தில் அற்புதமான மாற்றம் ஏற்படும். வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களுக்குப் பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். தைரியம் ஏற்படும். தூக்கமின்மை, பயம் பரிபூரணமாக நீங்கும்.
குரு பார்வை
ராசிநாதன் குரு பகவான் உங்களைப் பார்க்கிறார். அதே நேரத்தில் பூர்வ புண்ணிய தோஷம் ஏற்படும் என்பதால் அபிராமி அந்தாதியில் இருக்கும் 49, 50, 75 ஆவது பாடல்களை படிப்பது, கேட்பது ஏற்றத்தைத் தரும். பிள்ளைகள் விஷயத்தில் கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் பழக்க வழக்கங்களில் கவனம் தேவை. கூடாநட்பால் பிரச்சனைகள் வருவற்கான வாய்ப்புள்ளது. பிள்ளைகளை சபிப்பது, திட்டுவதை தவிர்ப்பது நல்லது.
உடற்பயிற்சி அவசியம்
பிள்ளைகளின் தொழில், படிப்பு, உத்தியோகம், வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும். பிள்ளைகளிடத்தில் இணக்கமாகச் செல்வது நல்லது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதை கடைப்பிடிப்பது நல்லது. தினமும் வஜ்ராசனம் செய்வது ஏற்றத்தைத் தரும். குரு பகவான் ராசிநாதன் உங்களைப் பார்ப்பதால் முகத்தில் தேஜஸ் ஏற்படும்.
வழிபாடு
சோஷியல் மீடியாவில் பெயர் புகழ் கிடைக்கும். மீடியா துறையில் இருப்பவர்கள், படைப்பாளிகள், கலைத் துறையினருக்கு பெயர், புகழ், சந்தோஷம் ஏற்படும். நல்லவையும், சந்தோஷமும், அனுகூலமும் காணப்படும். அடிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான விஷயங்களில் அதீத கவனம் தேவை. கால் மரத்து போகும் என்பதால் உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வது நல்லது. மீனம் ராசியினருக்கு பழனி முருகரின் ராஜ அலங்கார வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications