Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு கோடிகளில் புரளும் யோகம்.. தொழிலில் லாபம், அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு பலன் 2025: விசுவாவசு வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் சித்திரை மாதம், தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏற்றம் தரும் புத்தாண்டாக இருக்குமா, எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும், வழிபாடு முறைகள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்காலம்.

2025 ஆம் ஆண்டில் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சித்திரைப் பிறக்கவுள்ளது. தமிழ் வருடத்தில் சித்திரைப் பிறப்பு என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடைக்காடர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. தமிழ் வருடங்களின் 60 ஆண்டுகளில் 38 ஆவது ஆண்டாக வரக்கூடிய விசுவாவசு வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது.

tamil-puthandu-palan-for-rishabam-what-kind-of-benefit-will-get-rishabam-rasi-people-during-this-t

இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், ரிஷப ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில் கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரிஷபம் - இந்த தமிழ் புத்தாண்டில் ரிஷப ராசிக்காரர்களுக்கு பள்ளி கொண்ட பெருமாள் வழிபாடு அனுகூலம், சந்தோஷத்தை தரும். விஷ்ணு காயத்ரி, விஷ்ணு சகஸ்கர நாமம் கேட்பது நல்லது. ரத்த அழுத்தம், சர்க்கரை பிரச்சனைகளை பார்த்துக் கொள்வது நல்லது. முதுகு தண்டுவட உடற்பயிற்சி செய்து கொள்வது நன்மை பயக்கும். இரண்டரை ஆண்டு காலத்துக்கு சனி பகவான் நன்மை செய்யப் போகிறார். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும்.

வாகன அமைப்பில் அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். பெற்றோர் பெரியோர் தேக ஆரோக்கியத்தில் மட்டும் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம், அனுகூலம் ஏற்படும்.

தொடர்ச்சியாக இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் தீர்வதை கண்கூடாகப் பார்ப்பீர்கள். தனிப்பட்ட முறையில் நீண்டநாட்களாக இருந்த பிரச்சனைகள், பாதிப்புகளில் இருந்து விடுதலை அடைவீர்கள். பெரிய பொறுப்புகளுக்கு வருவீர்கள். வழக்கு போன்ற பிரச்சனைகள் சாதகமாக முடியும். தேக ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு இனி சரியான மருத்துவம் பார்ப்பீர்கள். சிறிய அறுவை சிகிச்சை அல்லது வேறு மருத்துவம் பார்க்க சரியான காலகட்டமாக இருக்கும்.

தொழில் இல்லாமல் மரண பயத்துடன் இருந்தவர்களுக்கு இனி தொழில் கிடைக்கும் யோகம் உண்டாகும். தொழில், வியாபாரம், படிப்பு, உத்தியோகத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கையில் நல்ல அந்தஸ்தையும், கெளரவத்தையும் தரக்கூடிய ஆண்டாக இருக்கும்.

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. அதிக தங்க நகைகளை வாங்கி குவிக்கும் யோகம் உண்டாகும். சகோதர, சகோதரிகளுக்கு திருமண யோகம் உண்டாகும். பகை விலகும். நோய் மறையும், கடன்கள் அனைத்தும் தீரும். ஏற்றமும், முன்னேற்றமும் நிறைந்த காலகட்டாக இருக்கும். எதார்த்தமாக கோயில் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு செல்லும் யோகம் ஏற்படும்.

பத்தாம் இடத்தில் குரு பார்வை கிடைப்பதால் தொழிலில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். நல்ல லாபம், அங்கீகாரம், சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொட்ட காரியங்களில் வெற்றியைத் தரும் காலகட்டமாக இருக்கும். கண் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு அபரிமிதமான லாபம், வெற்றி உண்டாகும்.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+