Tamil Puthandu Palan: குருவின் அருளால் மிதுன ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. வருமானம் கொட்டும்
Tamil Puthandu Rasi Palan: தமிழ் புத்தாண்டான பராபவ ஆண்டு பிறந்துள்ளது. கிருஷ்ணபட்சத்தில் துவாதசி திதியில், சதயம் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த தமிழ்ப் புத்தாண்டு மிதுனம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
பரிவர்த்தன யோகத்தோடு உருவாகியுள்ள இந்த தமிழ் புத்தாண்டில் பல்வேறு யோகங்கள் கண்டிப்பாக கிடைக்கும். வரும் குருப்பெயர்ச்சியின் மூலமாக குரு பகவான் உச்சமடைவதால் நடுத்தர குடும்பத்தினருக்கு பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார முன்னேற்றங்கள் நல்லவிதமாக இருக்கும். ஆக்கப்பூர்வமான நன்மைகள் கிடைக்கும் அற்புதமான ஆண்டாக இருக்கும்.

குரு பகவான் வீட்டில் புதன் பகவானும், புதன் பகவான் வீட்டில் குரு பகவானும் இருப்பதால் சரளமான வகையில் சிறப்பு, உத்தியோகத்தில் நல்ல பொறுப்பு கிடைக்கும். ஏழ்மை விலகி செல்வாக்கு அடையும் சிறந்த ஆண்டாகும். மழைப்பொழிவு நன்றாக இருக்கும். விளைச்சல் அதிகமாக இருக்கும். பசுக்கள் நிறைய பாலை கொடுக்கும். உரத் தொழிற்சாலைகள் நம் நாட்டிலேயே அதிகளவில் உற்பத்தி செய்யப்படும்.
விவசாயிகளுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும். காப்பீடில் நிறைய மாற்றம் ஏற்படும். மகசூல் நன்றாக இருக்கும். அந்த வகையில், இந்த தமிழ்ப் புத்தாண்டில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மிதுன ராசி பலன்கள் (Mithunam Rasi Palangal)
மிதுன ராசியினருக்கு உங்களுடைய ராசிநாதன் புதன் பகவான் குரு பகவானின் வீட்டில் இருப்பதால் நல்லவர்களின் சேர்க்கை கிடைக்கும். நல்லவர்களை சந்திக்கும் யோகம் உண்டு. உண்மையான உறவுகளை சந்திப்பீர்கள். சுக்கிர பகவான் உபஜெய லாப ஸ்தானத்தில் இருப்பதால் உதவியே கிடைக்காமல் பதவி கிடைக்கும் அமைப்பு உள்ளது. கனவுகள் நிறைவேறும். லட்சத்தில் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
தெளிவு பிறக்கும்
உங்களுடைய லட்சியம் கனவுகள் நிறைவேறும். தைரியம் மிகப்பெரிய பலமாக இருக்கும். ஒரு மாதிரி யோசித்துக் கொண்டே இருந்த இரட்டை மனநிலை தீரும். புத்தாண்டில் தெளிவு பிறக்கும். நல்ல ஆலோசகராக மனைவி அமைவார்கள். மனைவியின் பேச்சு கேட்டு செயல்படுவது நல்லது. மிதுன ராசிக்குள்ளேயே குரு பகவான் அமர்ந்துள்ளதால் இந்த தமிழ்ப் புத்தாண்டில் புதிய திட்டமிடல்களைச் செய்வீர்கள். அதனை நிறைவேற்றும் அமைப்பு உள்ளது.
பாக்கியம்
ஜூன் மாதத்தில் மிதுன ராசியில் இருந்து குரு பகவான் விலகுவதால் ஜூன் மாதத்தில் இருந்தே பொற்காலம் ஆரம்பமாகும். எதிர்மறை எண்ணங்கள் விலக ஆரம்பிக்கும். யோகாதிபதி சனி பகவானும் இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக இருப்பது பாக்கியத்தைக் கொடுக்கும். அரைகுறையாகவும், அல்லல் படும் சூழல்கள் எல்லாம் இனி நீங்கும். அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
குரு பார்வை
சனி பகவான் 10 இல் இருந்து வந்ததால் நிறைய கஷ்டப்பட்டிருப்பீர்கள். இந்த ஆண்டும் சனி பகவான் 10 இல் இருந்தாலும், குரு பகவான் நல்ல நிலையில் இருக்கிறார். குருவின் பார்வை சனியின் மேல் விழுவதால் அற்புதமான ஆண்டாக இருக்கும். வேலை பார்க்கும் இடத்தில் வேலை அதிகமாக இருக்கும். கூடுதல் உழைப்பை போட வேண்டியிருக்கும். குரு நல்ல நிலையில் இருப்பதால் உங்கள் உழைப்பிற்கே வருமானம் கிடைக்கக்கூடிய சூழல் ஏற்படும்.
வருமானம் கூடும்
விருப்பப்பட்ட இடத்திற்கு டிரான்ஸ்ஃபர் வாங்கி செல்லும் அமைப்பு உள்ளது. குடும்பத்துடன் ஒன்றாக வாழும் அமைப்பு உள்ளது. மிதுன ராசிக்கு தர்மகர்மாதிபதி யோகம் பூரணமாக வேலை செய்யக்கூடிய யோகமான ஆண்டாக இருக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் தானம் செய்யக்கூடிய அளவிற்கு வருமானங்கள் வரும்.
வழிபாடு
வேலையை விட்டுவிட்டு சொந்த தொழில் தொடங்குவதற்கான தைரியம் ஏற்படும். வழக்கறிஞர்களுக்கு மிகப்பெரிய யோக பலன்கள் கிடைக்கும். பெருமாள் வழிபாடு மிகச்சிறந்த ஏற்றத்தைக் கொடுக்கும். பண வரவு நன்றாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. புத்தாண்டில் கிடைக்கும் பலன்கள்? -
Tamil Puthandu Palan: மேஷ ராசிக்கு லாபம் கொட்டும்.. அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் உச்ச குரு -
Tamil Puthandu Palan: தமிழ் புத்தாண்டில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. முழு விவரம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மீன ராசிக்கு ஜென்ம சனியிலும் ஜாக்பாட்.. அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்..1 விஷயத்தில் ரொம்ப கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: சிக்ஸர் அடிக்கப் போகும் விருச்சிகம் ராசி.. தொட்டதெல்லாம் தங்கமாகும் யோகம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. கொட்டும் பணம்.. திருமணத்தில் கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கும்ப ராசிக்கு பராபவ ஆண்டில் அதிர்ஷ்டமா?.. முழு பலன்கள் விவரம் -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு கோடீஸ்வர யோகம்.. அள்ளிக் கொடுக்கும் குரு பகவான் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி












Click it and Unblock the Notifications