Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு கண்டகச் சனியிலும் திடீர் அதிர்ஷ்டம்.. இதில் மட்டும் கவனம்

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை 1 ஆம் நாளான தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டு மாற்றம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமுமாக இருக்கும். அந்த வகையில், தமிழ் புத்தாண்டில் கன்னி ராசியினருக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களையும், அசுப பலன்களையும் ஏற்படுத்தும். ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் பராபவ தமிழ் புத்தாண்டு சனி மற்றும் குருவின் திரிகோண சேர்க்கையுடன் ஏற்பட்டுள்ளது.

tamil-puthandu-rasi-palan-kanni-rasi-people-will-get-fortunes-during-this-tamil-puthandu-period

இந்த கிரக நிலையானது 12 ராசிக்காரர்களுக்கும் பல நல்ல மாற்றங்களையும், சவால்களையும் கொண்டுவர உள்ளது. சில ராசிகளுக்கு யோக பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில் இந்த தமிழ் புத்தாண்டில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)

கன்னி ராசியினருக்கு கண்டக சனி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கணவன், மனைவியின் உடல்நிலையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அலர்ஜி, ஒவ்வாமை, சளி, மூச்சுப் பிரச்சனை, முதுகுதண்டுவடத்தில் பாதிப்புகள் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. கழிவறை செல்லும்போது கவனம் தேவை. பயணங்கள் மேற்கொள்ளும்போது ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.

திருமண யோகம்

தைரியம் ஏற்படும். நிறைய நன்மைகள் நடக்கும். பிள்ளைகள் விஷயத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பாதிப்புகள் எல்லாம் நீங்கி நன்மைகள் பெறுவீர்கள். திருமண அமைப்புகள் கைகூடும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த ஆண்டில் திருமணம் நடக்கும். குடும்பம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

திடீர் அதிர்ஷ்டம்

திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும் நல்ல காலகட்டம். பெரிய பொறுப்புகள் கிடைக்கும் நல்ல காலகட்டம். 11 ஆம் இடத்தில் உச்சம் பெற்ற குரு வருவதால் மேன்மைகள் உண்டாகும். பெரிய பலம் கிடைக்கும். குடும்பத்தில் நல்ல நிலைமைகள் ஏற்படும். பெரிய அளவில் அரசியலில் உச்சத்துக்கு வருவார்கள். நல்ல நிர்வாகத்துக்கு வருவார்கள். அரசியலில் காணாமல் போய்விடுவார்கள் என்று நினைத்தவர்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வருவார்கள்.

கவனம்

படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர், ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வு எழுதுபவர்கள், நீட் எழுதுபவர்களுக்கு நிறைய நல்லவை நடக்கும். வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் குடும்பப் பிரச்சனையில் தலையிடவே கூடாது. மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. ஏற்றம் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

வழிபாடு

நல்ல நேரம், சந்தோஷம், அனுகூலம் வரும் நேரம். முதலீடுகளைச் செய்யும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. பணம் சார்ந்த விஷயங்களில், விலை உயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். கன்னி ராசியினர் கீழ்திருப்பதிக்கு சென்று வருவது ஏற்றத்தைக் கொடுக்கும். மாதத்தில் ஒரு புதன்கிழமை பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது நன்மையைத் தரும். அன்னதானத்திற்கு தானம் கொடுக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+