தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் இந்த பராபவ ஆண்டில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசியினருக்கு குரு பாக்கியத்தில் இருந்ததால் நிறைய நன்மைகளை பெற்றிருப்பீரகள். இந்த தமிழ் புத்தாண்டில் குரு 10 ஆம் இடத்துக்குச் சென்ரு குரு உச்சமடைவதால சில சாதகமான பலன்கள் கிடைக்கும். சனி 6 ஆம் இடத்தில் இருப்பதால் பண வரவு நன்றாக இருக்கும். தொழில் சார்ந்த விஷயங்களில் தைரியமாக முடிவெடுக்கலாம். கடன் வாங்கினாலும், கொடுத்தாலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

வேலையில் கவனம்
கேது 10 ஆம் இடத்திற்குச் செல்வதால் வேலையை இழக்கக்கூடிய சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வங்கி உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நிதி சார்ந்த தொழில் செய்வர்கள், வங்கியில் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ராகு கேதுவின் இந்த மாற்றம் கூட இருப்பவர்கள் குழி பறிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும்.
அதீத உழைப்பு
சனி 6 ஆம் இடத்தில் இருக்கும் காலகட்டத்தில் ஒருவர் நல்லவரா இல்லையா என்பதை சிந்தித்து செயல்பட்டால் இந்த ஆண்டில் பெரிய பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வருடம் தொடங்கும்போது குருவின் பார்வை கிடைக்கும். ராகு கேது சாதகமான நிலையில் இருக்கிறது. இதுநாள் வரை உங்கள் வாழ்க்கையில் அடைய முடியாத இலக்குகளை அடைவதற்காகப் போராடுவீரகள். சுலபமான வெற்றி பெறும் வாய்ப்பு தடைபோடும். அதீத உழைப்பை போட வேண்டிய காலகட்டமாக இருக்கும்.
திருமண தடை நீங்கும்
திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகளுக்கு உரிய சிகிச்சை பெற்று குணமடையும் அமைப்பு உள்ளது. தொழிலில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். படிப்படியான வளர்ச்சியை திட்டமிடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் கிடைத்தால் அதனைப் பயன்படுத்திக் கொள்வது நன்மையைத் தரும்.
பட்டம், பதவி
புதிய பட்டம், பதவி, பொறுப்பு, புகழ் கிடைக்கும். உச்சமடையக்கூடிய குடு குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம், தெளிவு ஏற்படக்கூடிய அமைப்பு உள்ளது. படிக்கக்கூடிய மாணவர்களுக்கு விரும்பிய துறையில் சீட்டு கிடைக்கும். குடும்பத்தினருடன் இணக்கமாகச் சொல்வது நல்லது. மனதில் பட்டதை பேசுவது நன்மையைத் தரும். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள், பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும்.
கவனம்
6 ஆம் இடத்தில் சனி வந்து பல்வேறு அச்சுறுத்தல்களைக் கொடுத்தாலும் குரு உச்சமடைந்து சனியைப் பார்ப்பதால் மறைமுகமாக இருந்த கடன் சுமைகள் தீரும். 5 இல் ராகு இருப்பதால் பிள்ளைகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளால் சிறு சிறு சங்கடங்கள், மன உளைச்சல்கள் வருவதற்கான வாய்ப்புளளது. பிள்ளைகளின் திருமண விஷயத்தில் நிதானமாக முடிவெடுப்பது நன்மை பயக்கும்.
வெற்றி மேல் வெற்றி
திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். அரசியலில் பெரிய பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பெரிய பதவிகளுக்காக காத்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக பெரிய பதவி உயர்வுகள் கிடைக்கும். போராடி வெற்றி பெறும் காலகட்டம். ஆனால், கண்டிப்பாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் யோகம் உண்டு.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications