தமிழ் புத்தாண்டு பலன்: மிதுன ராசிக்கு தொழில், பணத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. பேச்சில் தான் பிரச்சனையே
தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2026: 2026 தமிழ் புத்தாண்டு, பராபவ வருடம் மிதுன ராசியினருக்கு எப்படி இருக்கும், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும், வழிபட வேண்டிய தெய்வம், தொழில் வளர்ச்சி, வேலை, திருமணம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம் (Mithunam)
மிதுனம் ராசியினருக்கு மிதுனம் ராசியினருக்கு இதுவரைக்கும் ஜென்மத்தில் இருந்த குரு தன ஸ்தானத்துக்கு மாறுகிறார். வீட்டுக்கான கடன், தொழிலை விரிவிடுபடுத்துவதற்கான கடன் போன்றவை கிடைக்கும். பழைய கடன்களை அடைக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். கடனை அடைத்து முடிக்கும் யோகம் உண்டு. வர வேண்டிய பணங்கள் வந்து சேரும். தாயின் உடல்நிலையில் மிகுந்த கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.

தொழில்
தொழிலில் ஏற்றம் பெறக்கூடிய யோகம் உண்டாகும். குடும்பம் சார்ந்த விஷயங்களில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள், வழக்குகள், வேலை வாய்ப்பு போன்றவை உங்களுக்கு சாதகமாக இருக்கும். குழந்தையின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
பண வரவு சூப்பர்
ஜென்மத்தில் இருந்து வீண் அலைச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்த குரு பகவான், இப்போது விலகி தொழில், வேலை, பணம் சார்ந்த விஷயங்களில் ஏற்றத்தைக் கொடுப்பார். திருமண வயதில் இருக்கக் கூடியவர்கள் திருமண விஷயங்களை உடனடியாகச் செய்வது நல்லது. தள்ளிப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். எலக்ட்ரிக் சம்பந்தப்பட்ட பொருள்களை வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். அதனால் வீட்டில் பெரிய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
கவனம்
கூட்டுத் தொழில் வைத்திருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சிறிய தொழில் செய்பவர்கள் பெரிய தொழிலை செய்ய விரும்புவீர்கள், பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தூக்கமின்மை, அலைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. வீட்டில் பெரியவர்களுக்கு கால், காது, மூக்கு, தொண்டை பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அமாவாசை நாட்களில் மலையனூர் சென்று வழிபாடு செய்து வருவது நன்மையைத் தரும்.
பேச்சில் கவனம்
ராசிக்கு 3 ஆம் இடத்தில் கேது மாறப்போகிறார். 9 ஆம் இடத்தில் ராகு, 10 ஆம் இடத்தில் சனி பகவானும் இருக்கிறார். இதனால், நல்லது செய்தும் கெட்ட பெயர் வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவது நன்மை பயக்கும். பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தொழில் செய்யும் இடத்தில் தேவையில்லாத சங்கடங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
மருத்துவ செலவு
குடும்பத்தில் இருப்பவர்களுக்கு திடீர் மருத்துவ செலவுகள், விரய செலவுகள் ஏற்படும். மே மாதத்திற்குப் பிறகு குரு 2 ஆம் இடத்திற்குச் செல்லும்போது குழப்பத்தில் இருந்து தெளிவடையும் யோகம் உண்டாகும். அப்பாவுக்கு நிறைய மருத்துவ செலவுகள், விரய செலவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள், கூட்டுத் தொழிலில் இருக்கும் நபர்களால் மன உளைச்சல், பண இழப்பு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
வழிபாடு
படிக்கும் குழந்தைகளுக்கு நல்ல நியாபக சக்தி ஏற்படும். அறிவுக் கூர்மை அதிகரிக்கம். முன்னேற்றம் தரக்கூடிய ஆண்டாக இருக்கும். பத்ரகாளியம்மன் கோயிலில் தீபமேற்றி வழிபாடு செய்வது நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications