தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிகம் ராசிக்கு கோடியில் புரளும் யோகம்.. அள்ளிக் கொடுக்கும் குரு பகவான்
தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2026: 2026 தமிழ் புத்தாண்டு, பராபவ வருடம் விருச்சிகம் ராசியினருக்கு எப்படி இருக்கும், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும், வழிபட வேண்டிய தெய்வம், தொழில் வளர்ச்சி, வேலை, திருமணம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம் (Viruchigam)
விருச்சிகம் ராசியினர் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வந்திருப்பீர்கள். இப்போது ராசியை குரு பகவான் பார்க்கிறார். பஞ்சமத்தில் சனி பகவான் இருக்கிறார். சுப காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும் யோகம் உண்டு. இதுவரை பட்டு வந்த கஷ்டங்கள், துன்பங்கள் தீரும். தொழில் விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகக்கூடிய அமைப்பு உள்ளது. திருமண யோகம் உண்டாகும். சகோதரர்களுடன் அந்நியோன்யம் உருவாகும்.

குரு பார்வை
குரு பகவான் 9 ஆம் இடத்தில் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து நிறைய நன்மைகளைக் கொடுப்பார். தாய், தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். தொழில் ஸ்தானம் நன்றாக இருக்கும். தொழிலில் ஏற்றம் ஏற்படும். ஏராளமான துன்பத்தை அனுபவித்து வந்த உங்களுக்கு இந்த குரு பார்வை மன நிம்மதி, மகிழ்ச்சி, மனநிறைவையும் கொடுத்து அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் யோகம் உண்டாகும்.
அனுகூலம்
நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தில், உத்தியோகம் செய்யக்கூடிய இடத்தில் என பல்வேறு பிரச்சனை சந்தித்து வந்திருப்பீர்கள் இனி அந்த நிலைமை எல்லாம் தீரும். குடும்பத்தைப் பிரிந்து வந்தவர்கள் மீண்டும் குடும்பத்தினருடன் சேரும் யோகம் உண்டாகும். பூமி, மனையில் இருந்து வந்த பிரச்சனை தீரும். பதவி உயர்வில் இருந்து வந்த சிக்கல் தீரும். பிரிவில் இருந்து நல்ல மாற்றம் கிடைக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும்.
நிலம், வீடு வாங்கும் யோகம்
உடல் ரீதியாக பெரியவர்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மாற்று வழிகள் கிடைக்கும். கோயில் ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோயில் காரியங்களை செய்வது, அன்னதானங்களைச் செய்வது போன்ற அமைப்பு உள்ளது. பூமி, மனை போன்றவை உங்களுக்கு கைகொடுக்கும். சொந்தபந்தங்கள், மூத்தவர்களின் ஆசிர்வாதம், ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும்.
ஆபரண சேர்க்கை
மூத்தவர்கள், பெற்றோரின் வழியில் செல்வது நிறைய நன்மைகளைத் தரும். திருச்செந்தூர் முருகன் வழிபாடு செய்வது முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்தில் சனி பகவானும், 9 ஆம் இடத்தில் குரு பகவானும் வருவது விசேஷமான தன்மையாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். செய்யக்கூடிய செயல்களில் புதிய உத்தியை கையாண்டு வாழ்க்கையிலும், பொருளாதாரத்தில் இரட்டை லாபம் பெறுவீர்கள்.
வெளிநாடு யோகம்
வெளிநாட்டிற்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புகளுக்காக காத்திருந்தவர்களுக்கு இருந்த தடைகள் எல்லாம் நீங்கும். சொந்தமாக தொழில் செய்யும் யோகம் உண்டாகும். புதிய கடன் கிடைக்கும். வீடு கட்டும் அமைப்பு, நிலம் வாங்குவது, முதலீடுகள் செய்வது போன்ற யோகம் உண்டாகும். நிறைய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
உங்களை நம்புங்க..
ராசிக்கு 3 ஆம் இடத்தையும், ராசிக்கு 5 ஆம் இடத்தையும் குரு பார்ப்பது விசேஷமான அமைப்பாக இருக்கும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள், மாணவர்களுக்கு வளர்ச்சி நிறைந்த காலகட்டமாக இருக்கும். யார் பேச்சையும் கேட்காமல் உங்களை மட்டும் நம்புவது நன்மையைத் தரும். திருமணத்தை தள்ளிப்போடாமல் உடனடியாக செய்வது நல்லது. பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகத்தில் இருந்த தடைகள் நீங்கும். ரொம்ப நாட்களுக்குப் பிறகு சந்தோஷமான விஷயங்கள நடக்கும்.
பண வரவு கொட்டும்
9 இல் குரு வருவதால் பெற்றோர் தேக ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது, அவர்களிடம் வாக்குவாதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று வருவது ஏற்றத்தைத் தரும். சுப்பிரமணிய புஜங்கத்தை தினந்தோறும் கேட்பது, படிப்பது வாழ்க்கை முழுவதிலும் ஏற்றத்தை ஏற்படுத்தும். பண வரவு அபரிமிதமாக இருக்கும் காலகட்டம். உங்களை கேலி செய்தவர்கள் திரும்பிப் பார்க்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை தவிர்ப்பது நல்லது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு அடிக்கும் லாக் ஜாக்பாட்.. எல்லா யோகமும் உங்களுக்கு தான் -
தமிழ் புத்தாண்டு பலன்: சிம்ம ராசியை ஆட்டிப் படைக்கும் அஷ்டமசனி.. அதிர்ஷ்டமும் காத்திருக்கு -
Mesham: மேஷம் ராசிக்கு புத்தாண்டில் வரப்போகும் அற்புதமான மாற்றங்கள்.. இதை மட்டும் கடைப்பிடிங்க -
தமிழ் புத்தாண்டு பலன்: மிதுன ராசிக்கு தொழில், பணத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. பேச்சில் தான் பிரச்சனையே -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications