Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் புத்தாண்டில் 4 ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை 1 ஆம் நாளான தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டு மாற்றம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமுமாக இருக்கும். அந்த வகையில், தமிழ் புத்தாண்டில் 4 அதிர்ஷ்ட ராசியினர் யார், கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களையும், அசுப பலன்களையும் ஏற்படுத்தும். ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் பராபவ தமிழ் புத்தாண்டு சனி மற்றும் குருவின் திரிகோண சேர்க்கையுடன் ஏற்பட்டுள்ளது.

tamil-puthandu-rasi-palan-which-4-zodiac-signs-will-get-jackpot-during-this-tamil-puthandu

இந்த கிரக நிலையானது 12 ராசிக்காரர்களுக்கும் பல நல்ல மாற்றங்களையும், சவால்களையும் கொண்டுவர உள்ளது. சில ராசிகளுக்கு யோக பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில் இந்த தமிழ் புத்தாண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளும் 4 ராசியினர் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)

கன்னி ராசியினருக்கு தைரியம் ஏற்படும். நிறைய நன்மைகள் நடக்கும். பிள்ளைகள் விஷயத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பாதிப்புகள் எல்லாம் நீங்கி நன்மைகள் பெறுவீர்கள். திருமண அமைப்புகள் கைகூடும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த ஆண்டில் திருமணம் நடக்கும். குடும்பம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

திடீர் அதிர்ஷ்டம்

திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும் நல்ல காலகட்டம். பெரிய பொறுப்புகள் கிடைக்கும் நல்ல காலகட்டம். 11 ஆம் இடத்தில் உச்சம் பெற்ற குரு வருவதால் மேன்மைகள் உண்டாகும். பெரிய பலம் கிடைக்கும். குடும்பத்தில் நல்ல நிலைமைகள் ஏற்படும். பெரிய அளவில் அரசியலில் உச்சத்துக்கு வருவார்கள். நல்ல நிர்வாகத்துக்கு வருவார்கள். அரசியலில் காணாமல் போய்விடுவார்கள் என்று நினைத்தவர்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வருவார்கள்.

கவனம்

படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர், ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வு எழுதுபவர்கள், நீட் எழுதுபவர்களுக்கு நிறைய நல்லவை நடக்கும். வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் குடும்பப் பிரச்சனையில் தலையிடவே கூடாது. மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. ஏற்றம் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

வழிபாடு

நல்ல நேரம், சந்தோஷம், அனுகூலம் வரும் நேரம். முதலீடுகளைச் செய்யும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. பணம் சார்ந்த விஷயங்களில், விலை உயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். கன்னி ராசியினர் கீழ்திருப்பதிக்கு சென்று வருவது ஏற்றத்தைக் கொடுக்கும். மாதத்தில் ஒரு புதன்கிழமை பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது நன்மையைத் தரும். அன்னதானத்திற்கு தானம் கொடுக்கலாம்.

விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)

விருச்சிக ராசியினருக்கு சந்திரன் நீச்சமாக இருப்பதால் யோகா, மூச்சு பயிற்சியை கற்றுக் கொள்வது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய அற்புதமான காலகட்டம். குழந்தை பாக்கியம், திருமண யோகம், வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, விவசாயம் செய்வது, விவசாயத்தில் புரட்சி செய்வது போன்ற அமைப்பு உள்ளது.

முன்னேற்றம்

கால்நடை விவசாயம் செய்வீர்கள். ஆடு, மாடு, கோழி, காடை போன்றவற்றை வளர்ப்பீர்கள், மாடித்தோட்டம் வைக்கும் அமைப்பு உள்ளது. குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். தைரியம் ஏற்படும். உங்களை கேலி செய்தவர்கள் எல்லாம் உங்களைத் தேடி வரும் அமைப்பு உள்ளது. 9 இல் குரு வருவதால் எல்லா விஷயங்களிலும் ஏற்றம் உண்டாகும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

ஆரோக்கியம்

குடும்பத்தில் ரத்தபந்த உறவுகளிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்கள் தேக ஆரோக்கியத்தில் சளி, காய்ச்சல், சிறுநீரகத் தொற்று, மலேரியா பாதிப்பு, விஷ ஜந்துக்கள் கடிப்பது போன்ற பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பிள்ளைகளுடைய படிப்பு, உத்தியோகம், வியாபாரம், தொழிலில் இருந்த சிக்கல்கள் தீரும்.

கவனம்

பிள்ளைகள் விஷயத்தில் மேன்மை ஏற்படும். லாபம் உண்டாகும். பெற்றோர் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்துடன் சென்று குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது. உடன் பிறந்தவர்களுடன் தினந்தோறும் பேசுவது நன்மை பயக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மாயவரத்தில் உள்ள வைத்தீஸ்வரரை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். மாதத்தில் ஒரு செவ்வாய்க்கிழமை துர்க்கை வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.

மகரம் ராசி பலன் (Magaram Rasi Palan)

மகர ராசியினருக்கு அஷ்டமத்தில் சனி இருக்கும் கேது டிசம்பர் மாதம் வரை இருக்கிறது. நரம்பு, தலைவலி, முதுகு வலி தொடப்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சியை தவறாமல் கடைப்பிடிப்பது நல்லது. எல்லா விதமான நன்மைகளும் நடக்கும். குரு பார்வை வருவதால் நல்லவை நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும்.

தங்கம் வாங்கும் யோகம்

நகை வாங்கும் யோகம் உண்டாகும். அபரிமிதமான லாபங்கள் கிடைக்கும். திருமண யோகம் உண்டு. வீடு கட்டுவது, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். பாசிட்டிவான நிலைமைகள் ஏற்படும். நகை வாங்குவது, ஆடை, ஆபரணங்கள் வாங்கும் அமைப்பு உள்ளது. நிறைய அதிசயங்கள் நடக்கும். தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். சனி அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு வாக்கியப்படி 3 ஆம் இடத்தில் இருப்பதால் நிறைய நன்மைகள் நடக்கும்.

பேச்சில் கவனம்

வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வண்டி வாகனம் வாங்கும் அமைப்பு உள்ளது. அஷ்டலட்சுமி கடாட்சம் ஏற்படும். உறவினர்களால், நண்பர்களால் குடும்பத்துக்குள் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. வாக்கு ஸ்தானத்தில் ராகு இருப்பதால் பேச்சில் மிகுந்த கவனம் தேவை. நல்லது பேசப் போய் அது கெட்டதில் முடியக்கூடிய வாய்ப்புள்ளது. பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிப்பது நன்மை பயக்கும்.

தவிர்க்கவும்

வண்டிகளில் செல்லும் போது உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது. விபத்துகளில் சிக்கும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. வழுக்கலான இடங்கள், படிக்கட்டுகளில் செல்லும்போது பார்த்து செல்வது நல்லது. இளைஞர்களுக்கு பெற்றோர் அதிவேக இருசக்கர வாகனங்களை வாங்கிக் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மகர ராசியினர் பிள்ளையார்பட்டியில் வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

மீனம் ராசி பலன் (Meenam Rasi Palan)

மீனம் ராசியினருக்கு ஜென்ம சனி நடந்து கொண்டிருப்பதால் வயிறு சார்ந்த பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். முதுகு, கால், பாதம், நகம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. உடற்பயிற்சியை தவறாமல் செய்ய வேண்டும் படிக்கட்டுகள், வழுக்கலான பகுதிகளில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நிறைய நன்மைகள் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

முன்னேற்றம்

வேலை, தொழில், வியாபாரம், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் பெருகும். குழந்தைகளுக்கு நிறைய நல்லவை செய்வீர்கள். சேமிப்புகளைத் தொடங்குவீர்கள். அஷ்டலட்சுமி கடாட்சம் உண்டாகும். வங்கியில் பணத்தை சேமிக்க ஆரம்பிப்பீர்கள். நல்ல நிறுவனத்தில் சிட் போடலாம். அஞ்சலக்ததில் சேமிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும்.

ஐஸ்வர்யம்

தேர்தலில் நன்மைகள் நடக்கும். பெரிய பொறுப்புகளுக்கு வருவீர்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். ராசியில் உத்திரட்டாதி நட்சத்திரம் உள்ளது. வேர்வை வரும் அளவுக்கு உழைப்பது, உடற்பயிற்சி செய்வது நன்மையைத் தரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஜென்மசனியில் நிறைய அதிர்ஷ்டங்கள், ஐஸ்வர்யமும் கிடைக்கும்.

பதவி உயர்வு

படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர், காவல் துறையினர், மருத்துவர்களுக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். விருதுகள், பாராட்டுகள், அங்கீகாரம் பெறும் யோகம் உண்டு. எல்லா விஷயங்களும் அற்புதமாக இருக்கும். மகான்களுடைய நாம கீர்த்தனை சொல்வது அனுகூலத்தைத் தரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பழனி முருகரை ராஜ அலங்காரத்தில் தரிசனம் செய்வது அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+