Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தை மாத பலன் 2026: தங்கத்தை வாங்கி குவிக்கும் மகர ராசி.. கோபம் மட்டும் வேண்டாமே

Subscribe to Oneindia Tamil

தை மாத ராசி பலன்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனுடைய தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் மாதமே மகர மாதம். தை மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்று பலர் காத்துக் கொண்டிருப்பார்கள். மகாபாரதத்தின் பிதாமகனான பீஷ்மர் இந்த தை மாதத்துக்காகவே அம்பு படுக்கையில் தன் உயிர் போவதற்காக காத்துக் கொண்டிருப்பாராம். அந்த அளவுக்கு புனிதமான மாதம்.

thai-matha-palan-magaram-rasi-people-will-get-huge-success-and-lots-of-money-during-this-month

சூரியன் வழிபாட்டுக்கு உகந்த மாதம். சூரியனை வழிபடும் பண்டிகையே பொங்கல் பண்டிகை. சூரியன் இல்லை என்றால் இந்த உலகமே இல்லை. கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக ராசியில் சித்த யோகத்தில் பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது. இந்த தை மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு 6 ஆம் இடத்தில் குரு பகவான் இருக்கிறார். 12க்கு உடையவர் 6 இல் மறைவதால் விபரீத ராஜயோகம் ஏற்படும். தங்க நகைகளை வாங்கும் யோகம் உண்டாகும். அடகு வைத்த நகைகளை மீண்டும் மீட்டெடுப்பீர்கள். தங்கம் சம்பந்தப்பட்ட முதலீடுகளைச் செய்வீர்கள். தங்கப் பத்திரங்களை வாங்குவீர்கள்.

புதிய பாதை

ராசிநாதன் சனி பகவான் 3 ஆம் இடத்தில் வக்கிரம் பெற்றிருந்த நிலையில் இப்போது வக்கிர நிவர்த்தி அடைகிறார். உடலில் இருந்த பழைய விஷயங்களை எல்லாம் களைந்து புதிய பாதையைக் கொடுப்பார். சோம்பேறித் தனமாக இருந்த நிலைமை எல்லாம் நீங்கும். மேலதிகாரிகள், நிறுவனத்தின் மேல் இருந்த வெறுப்பு எல்லாம் நீங்கி புத்துணர்ச்சியுடன் வேலை செய்யத் தொடங்குவீர்கள்.

சுற்றுலா செல்லும் யோகம்

12 ஆம் இடத்தில் ஏதாவது ஒரு கிரகம் இருந்தாலே நன்மை பயக்கும். செவ்வாய், சுக்கிரன், சூரியன், புதன் என அனைத்து கிரகங்களும் ஒரே இடத்தில் இருக்கின்றன. 12 ஆம் இடம் என்பது அயன சயன ஸ்தானம். இல்லற வாழ்க்கையில் இனிமை ஏற்படும். சுற்றுலா செல்லக்கூடிய பாக்கியங்கள் ஏற்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி

உங்கள் துணையுடன் பிடித்த இடங்களுக்கெல்லாம் சுற்றுலா சென்று வரக்கூடிய பாக்கியம் ஏற்படும். மகிழ்ச்சிக்காக உங்களுடைய நேரத்தை செலவு செய்வீர்கள். குடும்பத்துக்காக இனி உங்களுடைய நேரத்தை செலவு செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். செவ்வாய் பகவான் உச்சம் பெற்று ராசியில் வருவதால் உக்கிரமாக இருப்பீர்கள்.

யாராவது உங்களை சீண்டி விட்டால் கடும் கோபம் ஏற்படும். திடீரென பெரிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. ராசியில் செவ்வாய் பகவான் உச்சமாவதால் வம்பு, வழக்கு, பஞ்சாயத்து, சண்டை, சச்சரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. போலீஸ் வரை செல்லும் நிலைமை ஆகும்
என்பதால் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

வழிபாடு

வீட்டின் அருகில் இருக்கும் முருகன் கோயில்கள், குன்றத்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று வருவது ஏற்றத்தை ஏற்படுத்தும். அருகில் உள்ள கோயில்களுக்கு வேல் சாற்றுவது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+