தை மாத ராசி பலன் 2026: சிம்ம ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. பணத்திற்கு பஞ்சமே இருக்காது
தை மாத ராசி பலன்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனுடைய தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் மாதமே மகர மாதம். தை மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்று பலர் காத்துக் கொண்டிருப்பார்கள். மகாபாரதத்தின் பிதாமகனான பீஷ்மர் இந்த தை மாதத்துக்காகவே அம்பு படுக்கையில் தன் உயிர் போவதற்காக காத்துக் கொண்டிருப்பாராம். அந்த அளவுக்கு புனிதமான மாதம்.

சூரியன் வழிபாட்டுக்கு உகந்த மாதம். சூரியனை வழிபடும் பண்டிகையே பொங்கல் பண்டிகை. சூரியன் இல்லை என்றால் இந்த உலகமே இல்லை. கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக ராசியில் சித்த யோகத்தில் பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது. இந்த தை மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு ஏற்கனவே அஷ்டமசனி 8 ஆம் இடத்தில் அமர்ந்து பல்வேறு பிரச்சனைகளைக் கொடுத்துக் கொண்டிருப்பார். 7 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். ராகு உங்களை கெடுக்க முடியுமா என்று முயற்சிப்பார். இல்லையெனில் உங்கள் பெயரைக் கெடுப்பார்.
பணவரவு
ஜனவரி 1 முதல் 15 ஆம் தேதி வரை அற்புதமான பலன்களைப் பெறுவீர்கள். இந்த 15 நாள்கள் பண வரவு வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். எல்லா கிரகங்களும் 5 ஆம் இடத்தில் இருக்கும்போது பண வரவு இரட்டிப்பாக உயரும். சாதாரணமாக கிடைக்கும் பணம் கூட கூடுதலாக கிடைக்கும் வாய்ப்பு வரும். செய்யும் வேலை, தொழில்களில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
சண்டை சச்சரவு
5 ஆம் இடத்தில் செவ்வாய், குரு, சுக்கிரன், புதன், சூரியன் என 5 கிரகங்கள் இருக்கின்றன. 1 ரூபாய்க்கு வாங்கிய பொருள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யும் யோகம் ஏற்படும். ஜனவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு 4க்கு உரிய செவ்வாய் 6 ஆம் இடத்தில் உச்சம் பெறுகிறார். கடன், வியாதி, கஷ்டம் போன்றவை ஏற்படும் காலகட்டமாக இருக்கும். தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
வம்பு வழக்கு
வம்பு வழக்குகள் தேடி வரும். சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்புள்ளது. சிறை செல்லக்கூடிய வாய்ப்பும் உள்ளது. அரசு, அரசு சார்ந்த விஷயங்கள், வம்பு, வழக்கு, கோர்ட், கேஸ், பஞ்சாயத்து, அடிதடி போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது.
பண விஷயத்தில் கவனம்
மற்றவர்கள் உங்களுக்கு அறிவுரை சொல்லக்கூடிய சூழல், நீங்கள் மன்னிப்பு கேட்கும் சூழல் ஏற்படக்கூடும். இருப்பினும், முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். 5 இல் இருக்கும் புதன் பகவான் 6 இல் மறைகிறார். பணம் சார்ந்த விஷயங்களில் பிரச்சனை வரும் என்பதால் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. 7 ஆம் இடத்து ராகு இருக்கும் வரை தேவையில்லாத பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
வழிபாடு
வீட்டில், குடும்பத்துக்குள் பிரச்சனை வரும் சூழல் ஏற்படும். மனைவியிடம் கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. திருச்செந்தூர் முருகனை வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: குரு பகவானின் அருளால் மீன ராசிக்கு வாழ்க்கை மாறப் போகிறது! -
2026 குருப்பெயர்ச்சி: கன்னி ராசிக்காரர்களே தயார்! அடுத்தடுத்து யோகம் காத்திருக்கிறது -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications