Kumbam Thai Matha Palan: கும்ப ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. கால் வைக்கும் இடமெல்லாம் கண்டம்
தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
மகர மாதம்
சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். மகர மாதம் என்றும் கூறப்படுகிறது. சூரியனின் தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் காலம் தான் தை மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஐதீகம். மகாபாரதத்தின் பிதாமகரான பீஷ்மர் தை மாதத்தில் தனது உயிர் போவதற்கு அம்பு படுக்கையில் காத்துக் கொண்டிருந்தாராம். அந்த அளவுக்கு சிறப்பு பெற்றது தை மாதம். தேவர்களின் உதயகாலம் தை மாதம். இந்த தை மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

கும்பம் தை மாத ராசி பலன் (Kumbam)
கும்ப ராசிக்காரர்களுக்கு ராசியாதிபதி 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். விரய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் சேருகின்றன. சந்திரன் சேரும்போதெல்லாம் ஆரோக்கியத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். தேவையில்லாத பஞ்சாயத்துகள், சண்டை, சச்சரவுகள், நிலத் தகராறில் சிக்கும் சூழல் ஏற்படும்.
குரு ராகு இணைவு
வெளியூர், வெளிநாடு செல்வது, காதல் திருமணம் செய்வது, வீட்டை விட்டுச் சென்று திருமணம் செய்வது போன்றவை அனைத்தும் நடக்கும் காலகட்டம். குரு ராகுவுடன் விரயத்தில் இணைந்துள்ளதால் எதுவெல்லாம் செய்யக் கூடாதோ அவற்றை எல்லாம் செய்வீர்கள். செவ்வாய் உச்சம் பெற்றிருக்க ஸ்தானம் என்பதால் நிறைய பேர் வீட்டை விட்டுச் சென்று திருமணம் செய்வீர்கள்.
பிரச்சனைகள்
சிலருக்கு மறைமுகமான உறவுளால் பிரச்சனைகள், பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு கால் பாதங்களில் பிரச்சனைகள் இருக்கும். குரு பார்வை ராசி, லக்கினம் மேலம் இருப்பதால் பெரிதாக பிரச்சனைகள் வரப்போகிறது என்றிருக்கும் பிரச்சனைகள் எல்லாம் கொஞ்சம் மாறும். புற்றநோயைக் கண்டறியும் சூழல் வரும். ரத்த பரிசோதனை, ஸ்கேன் என மருத்துவப் பரிசோதனைகள் செய்யக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
ஆரோக்கியம்
வீட்டில் பாட்டி தாத்தா இருந்தால் அவர்களது உடல்நிலையைப் பார்த்துக் கொள்வது நல்லது. முழுக்க முழுக்க ஆரோக்கியத்தை மட்டும் பார்த்துக் கொள்ளும் காலகட்டமாக இருக்கும். வேறு ஊர், வேறு நாட்டுக்குச் சென்றாலும் எந்த விஷயத்தையும் வெளியில் சொல்லாமல் சென்றாலே ஜெயிக்கக்கூடிய யோகம் ஏற்படும். வெளியூரில் வேலை கிடைத்தாலும் இப்போது செல்வது நல்லது.
வழிபாடு
ஊரு, சொந்தம், உறவுகள் என்றிருந்தால் பிரச்சனைகளைச் சந்திக்கக்கூடிய சூழல் ஏற்படும். உங்களை ஒதுக்கி வைக்கும் சூழலை ஏற்படுத்தும். சுப்பிரமணியர் வழிபாடு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதாரமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications