Magaram Thai Matha Palan: மகர ராசிக்கு 2 யோகம் கன்ஃபார்ம்.. உங்க காட்டுல பண மழைதான்
தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
மகர மாதம்
சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். மகர மாதம் என்றும் கூறப்படுகிறது. சூரியனின் தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் காலம் தான் தை மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஐதீகம். மகாபாரதத்தின் பிதாமகரான பீஷ்மர் தை மாதத்தில் தனது உயிர் போவதற்கு அம்பு படுக்கையில் காத்துக் கொண்டிருந்தாராம். அந்த அளவுக்கு சிறப்பு பெற்றது தை மாதம். தேவர்களின் உதயகாலம் தை மாதம். இந்த தை மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

மகரம் தை மாத ராசி பலன் (Magaram)
மகர ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். 4 கிரகங்களில் 2 ராஜ கிரகங்கள் லட்சுமி நாராயண யோகம், புதாதித்ய யோகத்தைக் கொடுக்கிறது. பலத்தைக் கொடுக்கக் கூடிய கிரகங்கள் இருப்பதால் எடுத்த காரியங்களில் ஜெயிக்கும் யோகம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு பெரிய யோகம் ஏற்படும்.
வெற்றி மேல் வெற்றி
அரசு அதிகாரிகளுக்கு, மின்சார வாரியம், நெடுஞ்சாலைத் துறை, அரசு ஆசிரியர்களுக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கும். இதுவரை வேலையில்லாமல் தவித்து வந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மிகப்பெரிய வெற்றிகளைக் காணக்கூடிய காலகட்டமாக இருக்கும். வழக்குப் பிரச்சனைகளில் மிகுந்த கவனம் தேவை. அடிவயிறு, உஷ்ணம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
கடன் கிடைக்கும்
ஒரு விஷயத்தை ஒருமுறைக்கு இருமுறை நீங்கள் சொல்ல வேண்டிய சூழல் ஏற்படும். இல்லையெனில் மற்றவர்கள் சொல்வது உங்களுக்குப் புரியாமல் போகும் வாய்ப்புள்ளது. இதனை மட்டும் சமாளித்துக் கொள்வது நல்லது. வீடு வாங்குவதற்கான கடன், தொழில், வியாபாரம் செய்வதற்கான கடன், புதிய வேலைகளை ஆரம்பிப்பது, அதில் வெற்றி பெறுவது என அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
வழிபாடு
உத்தியோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வங்கிக் கடன்கள் எளிதில் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கைப்பற்றும் யோகம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். ஆதிசேஷன், வைத்தீஸ்வரன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 85 சதவீதம் ஏற்றம் உண்டாகும்.
-
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications