Meenam Thai Matha Palan: மீன ராசிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டாகும்.. குறி வச்சா இரை விழும் யோகம்

Subscribe to Oneindia Tamil

தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

மகர மாதம்

சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். மகர மாதம் என்றும் கூறப்படுகிறது. சூரியனின் தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் காலம் தான் தை மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஐதீகம். மகாபாரதத்தின் பிதாமகரான பீஷ்மர் தை மாதத்தில் தனது உயிர் போவதற்கு அம்பு படுக்கையில் காத்துக் கொண்டிருந்தாராம். அந்த அளவுக்கு சிறப்பு பெற்றது தை மாதம். தேவர்களின் உதயகாலம் தை மாதம். இந்த தை மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

thai-matha-palan-what-kind-of-benefits-will-get-meenam-rasi-people-during-this-month

மீனம் தை மாத ராசி பலன் (Meenam)

மீனம் ராசிக்காரர்களுக்கு லாபங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் ஏற்றம் கொடுக்கக்கூடிய மாதமாக இருக்கும். நம்பிக்கை உருவாகும். தைரியம் உண்டாகும். இந்த மாதம் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். லாப ஸ்தானத்தில் நிறைய கிரகங்கள் சனியின் வீட்டில் அமரும்போது நீங்கள் எந்த விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அதனை செய்து முடிப்பீர்கள்.

வீடு வாங்கும் யோகம்

உடும்புப்பிடி என்று சொல்வது போல காரியத்தைக் கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் பாராட்டத்தக்க வகையில் மாறுவீர்கள். நிறைய பேர் வீடு வாங்கி கிரகப்பிரவேஷம் செய்வீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். காதல் கைகூடும். பெரிய வெற்றிகளைப் பெறுவீர்கள். நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.

பதவிகள் கிடைக்கும்

நிறைய பேருக்கு பெரிய பதவிகள் தானாக தேடி வரும். ஒரு சில இடங்களில் உங்கள் நண்பர்களே சிறு சிறு பிரச்சனைகளை செய்வீர்கள். ஆனால், அவை அனைத்தையும் சமாளித்து சரிசெய்வீர்கள். இஷ்ட காரியம், இஷ்ட தெய்வத்தைச் சென்று பார்த்து வருவீர்கள். நிறைய சந்தோஷத்தைப் பார்க்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

ஜெயம்

எடுத்த காரியங்களில் எல்லாம் ஜெயம் ஏற்படும். எந்த விஷயங்களை எப்படி செய்தாலும் வெற்றி கிடைக்கும் என்று திட்டமிட்டு செயல்படுவீர்கள். பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பெருகும். குலதெய்வ வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். பிள்ளைகள் விஷயங்களில் ஏற்றம் உண்டாகும்.

வழிபாடு

திருச்செந்தூர் முருகப் பெருமானின் அனுக்கிரகம் கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகள், நீங்கள், குடும்பம் என அனைவரும் நன்றாக இருப்பீர்கள். குஷியாக இருக்கக்கூடிய காலகட்டம். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+