Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தை மாத பலன் 2026: சொல்லி அடிக்கும் துலாம் ராசி.. புது வீடு, புது கார் வாழ்க்கையே மாறப்போகுது

Subscribe to Oneindia Tamil

தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

மகர மாதம்

சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். மகர மாதம் என்றும் கூறப்படுகிறது. சூரியனின் தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் காலம் தான் தை மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஐதீகம். மகாபாரதத்தின் பிதாமகரான பீஷ்மர் தை மாதத்தில் தனது உயிர் போவதற்கு அம்பு படுக்கையில் காத்துக் கொண்டிருந்தாராம். அந்த அளவுக்கு சிறப்பு பெற்றது தை மாதம். தேவர்களின் உதயகாலம் தை மாதம்.

thai-matha-palan-what-kind-of-benefits-will-get-thulam-rasi-people-during-this-motnh

சூரியன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக தை மாதம் உள்ளது. சூரியன் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. தை மாதம் 1 ஆம் தேதியான ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக ராசியில் சித்த யோகத்தில் அமையக்கூடிய நாளே பொங்கல் பண்டிகை. இந்தப் பண்டிகையின் விசேஷமே சூரியன், விவசாயிகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதாகும்.

பொங்கல் வைக்க நல்ல நேரம்

பொங்கல் தினத்தன்று காலையில் நேரமாக எழுந்து குளித்து முடித்து புத்தாடை அணிந்து சுவாமி கும்பிட்டுவிட்டு, சூரிய பகவானை வழிபாடு செய்து கிழக்கு நோக்கி அமர்ந்து பொங்கல் சாப்பிட வேண்டும். தை மாதத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் பொங்கல் வைக்கலாம். காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் பொங்கல் வைத்து இறைவனை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். சுக்கிர ஓரை, புதன் ஓரையாக இருந்தாலும் குளிகை நேரத்தில் பொங்கல் வைப்பது விசேஷமாகும்.

துலாம் தை மாத ராசி பலன் (Thulam)

துலாம் ராசிக்காரர்களுக்கு வீடு, நிலம், வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை மிகவும் தேவை. அவர்களுடைய நெஞ்சகம், நுரையீரல் போன்றவற்றில் பாதிப்பு, உடல் சூடு ஏற்படும் வாய்ப்புள்ளது. மோர் அதிகளவில் அருந்துவது நன்மை பயக்கும். பாக்கிய ஸ்தானத்தில் குரு இருப்பதால் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும்.

பிரச்சனை

சொந்த பந்தங்களை ஒதுக்கி வைத்துக் கொள்வது நல்லது. அம்மாவுடைய உறவுகள் மூலமாக சில பிரச்சனைகள், சண்டைகள் வரும் வாய்ப்புள்ளது. உங்கள் வீட்டில் நிறைய செலவுகள் ஏற்படும். அற்புதமான யோகங்கள் ஏற்படும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. ரத்த
அழுத்தம், கொழுப்பு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. உடற்பயிற்சியை செய்வது நல்லது.

பண யோகம்

பணம் வரக்கூடிய சூழல் ஏற்படும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். திருமணமாகவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு திருமண யோகம் ஏற்படும். புதன் பகவான் 12, 9க்கு உடையவர் 4 ஆம் இடத்தில் உச்சம் பெறுகிறார். இதனால், அற்புதமான பலன்கள் கிடைக்கும். நிறைய பண வரவு ஏற்படும். பிரிந்திருந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேரும் யோகம் உண்டாகும்.

வழிபாடு

நில புலன்கள், சொத்துகள், வண்டி வாகனங்கள், குவாரி, ஜல்லி, உற்பத்தி போன்றவை உங்களுக்கு சாதகமாக முடியும். மத்திய அரசு, வங்கித் துறைகள், பள்ளிகளில் வேலை செய்வோருக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாக 90 சதவீதம் ஏற்றம் உண்டாகும். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. நரசிங்கப் பெருமாள் வழிபாடு ஏற்றத்தைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+