Viruchigam Thai Matha Palan: விருச்சிகத்துக்கு பிரகாசமாக மாறப்போகும் வாழ்க்கை.. பொறுமை ரொம்ப அவசியம்
தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
மகர மாதம்
சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். மகர மாதம் என்றும் கூறப்படுகிறது. சூரியனின் தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் காலம் தான் தை மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஐதீகம். மகாபாரதத்தின் பிதாமகரான பீஷ்மர் தை மாதத்தில் தனது உயிர் போவதற்கு அம்பு படுக்கையில் காத்துக் கொண்டிருந்தாராம். அந்த அளவுக்கு சிறப்பு பெற்றது தை மாதம். தேவர்களின் உதயகாலம் தை மாதம். சூரியன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக தை மாதம் உள்ளது.

விருச்சிகம் தை மாத ராசி பலன் (Viruchigam)
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்தில் இந்த மாதம் முழுவதும் குரு வக்கிரமாக இருக்கிறது. 3 ஆம் இடத்தில் நிறைய பலமான கிரகங்கள் அமர்ந்திருக்கின்றன. 3 ஆம் இடம் என்பது ஆற்றல், உங்களைப் பற்றி பேசுவது, உங்களுடைய எண்ணங்கள், வண்டி வாகனங்கள், மற்றவர்கள் உங்களைப் பற்றி கோள் சொல்வது, விற்பனை சம்பந்தப்பட்ட திறமை போன்றவை அருமையாக இருக்கும்.
தொழில்
சிஸ்டம், ஐடி, சாஃப்ட்வேர், மீடியா, கம்யூனிகேஷன், நெட்வொர்க், காது மூக்கு, தொண்டை மருத்துவர் போன்ற அனைத்து தொழில்களிலும் அற்புதமான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இந்த காலகட்டத்தில் காது, மூக்கு, தொண்டை, கழுத்து, கைகளில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுவரை நடக்காத பல விஷயங்கள் இந்த காலகட்டத்தில் நடக்கும்.
பொறுமை அவசியம்
இளைய சகோதரன், சகோதரிகளுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். முடிந்த அளவுக்கு நீங்கள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குரு வக்கிரமாக இருப்பதால் கோர்ட், கேஸ், வம்பு, வழக்குகளை முடித்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் பல்வேறு சிக்கல்களில் சிக்குவதற்கான வாய்ப்புள்ளது. எதுவாக இருந்தாலும் சிறிது பொறுமையாக நடந்து கொள்வது நல்லது.
பதவி உயர்வு
எந்த அளவுக்கு நீங்கள் கவனமாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுக்கு நல்லது. பெரிய ஏற்றம், பெரிய வெற்றியைப் பெறும் காலகட்டமாக இருக்கும். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். நல்ல இடமாற்றம், தொழில் மாற்றம், மன மாற்றம் கண்டிப்பாக ஏற்படும். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும். சந்தோஷமும், பொருளாதாரமும் ஏற்றமும் உங்களுக்கு 75 சதவீதம் நன்றாக இருக்கும். ஆதிகேசவர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications