தை மாத ராசி பலன் 2022: விருச்சிகம், தனுசு ராசிக்காரர்கள் இந்த விசயத்தில் கவனம் தேவை
தை மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மன மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கப்போகிறது. யோகங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
சென்னை: விருச்சிக பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும், தனுசு ராசிக்காரர்களுக்கு தை மாதத்தில் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கப்போகிறது. விருச்சிகம், தனுசு ராசிகளில் பிறந்தவர்களுக்கு தை மாதத்தில் எப்படி இருக்கப் போகிறது என்று ராசி பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.
தை மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ரிஷபத்தில் ராகு, விருச்சிகத்தில் கேது, செவ்வாய், தனுசு ராசியில் சுக்கிரன், மகர ராசியில் சூரியன், சனி, புதன், கும்ப ராசியில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
கிரகப்பெயர்ச்சிகளைப் பார்த்தால் 1ஆம் தேதி மகர ராசியில் புதன் வக்ரம் ஆரம்பமாகிறது. 3ஆம் தேதி செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பயணம் செய்கிறார். 16ஆம் தனசு ராசியில் சுக்கிரன் வக்ரம் முடிகிறது. 22ஆம் புதன் வக்ர முடிவுக்கு வருகிறது. 30ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார்.

வெற்றிகரமான மாதம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த தை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்குள் கேது,இரண்டாம் வீட்டில் சுக்கிரன், செவ்வாய் மூன்றாம் வீட்டில் சனி, சூரியன்,புதன், நான்காம் வீட்டில் குரு ஏழாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. புதிய முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் இடமாற்றம் உண்டாகும். இளைய சகோதரன் சகோதரி வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். சந்தோஷம் அதிகம் நிறைந்த மாதம். ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். நீண்ட கால பிராத்தனைகள் நிறைவேறும்.

புதிய வேலை கிடைக்கும்
ராகு கேதுக்குள் கிரகங்கள் சிக்கியுள்ளன. சூரியன் சனியோடு இணைந்து முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்வதால் திடீர் சுப செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இரவு நேரத்தில் சாப்பிடும் உணவுகளில் காரத்தை குறைத்துக்கொள்ளவும். பெரிய மனிதர்களின் உதவியால்
பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள். புதிய வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் விழிப்புணர்வு அவசியம். திருமண சுப காரியத்திற்கு முயற்சி செய்யவும் நல்லது நடக்கும். ராசியில் உள்ள கேதுவினால் மன குழப்பம் அதிகரிக்கும். நெருப்பு, மின்சாதன பொருட்களை கையாளும் போது கவனமாக இருக்கவும். சிலரால் சிக்கல் வரும் என்பதால் பயணங்களைத் தவிர்க்கவும். குல தெய்வ வழிபாடு மன நிம்மதியை அதிகரிக்கும்.

மகிழ்ச்சிகரமான மாதம்
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த தை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் கேது, ராசிக்குள் சுக்கிரன், செவ்வாய் இரண்டாம் வீட்டில் சனி, சூரியன்,புதன், மூன்றாம் வீட்டில் குரு ஆறாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. மூன்று கிரகங்கள் இரண்டாவது வீட்டில் இணைந்துள்ளது. குடும்பத்தில் நன்மைகள் அதிகம் நடைபெறும். பெரியவர்களால் நன்மைகள் நடைபெறும். பணப்புழக்கம் நன்றாக திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வெளியிடங்களில் மதிப்பு மரியாதை கூடும். பெண்களால் நன்மைகள் நடைபெறும். பெண்களுக்கு மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.

குழப்பங்கள் நீங்கும்
சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைந்த பின்னர் நன்மை நடைபெறும். மூத்த சகோதரர் சகோதரி வகையில் நன்மைகள் நடைபெறும். செவ்வாய் உங்கள் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி சுக்கிரன் உடன் இணைவதால் காதல் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். நீண்ட நாட்களாக தீராத பிரச்சினை நீங்கும் தலைவலி முடிவுக்கு வரும். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சொந்த பந்தங்களால் உதவிகள் கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலைக்கு செல்பவர்க்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வீடு வாங்கும் யோகம் கை கூடி வரும். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுங்கள். அனுமனை வழிபடுங்கள் வெற்றிகள் தேடி வரும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications