Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு தொட்டதெல்லாம் பணமாகும்.. கோடியில் புரளும் யோகம்
வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம். தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறக்கப் போகிறது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும்.
மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு பண வரவு அற்புதமா இருக்கும். சந்தோஷத்துக்குப் பஞ்சமே இருக்காது. எடுத்த காரியங்களில் எல்லாம் ஜெயம் ஏற்படும். மேலதிகாரிகள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். யோக பலத்தை அதிகமாகப் பெறும் யோகம் உண்டு.
புதிதாக கற்றுக் கொள்ளும் யோகம்
இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் யோகம் ஏற்படும். கழுத்து தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும் அற்புதமான காலகட்டம். தைரியமாக முன்னோக்கிச் செல்லலாம். உங்களுடை நேரத்தை வீணடிக்காமல் இருப்பது நல்லது. சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
அலர்ஜி தொடர்பான விஷயங்களில் அதீத கவனமாக இருக்க வேண்டும். டென்சன், கோபம் போன்றவை ஏற்படும் என்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பிரச்சனைகள் வர வாய்ப்பு
சகோதரன், சகோதரிகள் மூலமாக பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. ராகுவுக்கு குரு வக்கிரமான பார்வை இருப்பதால் பயணங்களில் கவனம் தேவை. எந்தவொரு காரியத்தையும் அவசரப்படாமல் செய்வது நல்லது. முகத்தில் அழகு கூடும். தேஜஸ் அதிகரிக்கும். சந்தோஷமான விஷயங்கள் ஏற்படும். இளைய சகோதரன், சகோதரிகளின் கைகளில் அடிபடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
வழிபாடு
குருவுடைய பார்வை வக்கிரமாக இருப்பதால் பார்வை பலம் நன்றாக இருப்பதால் அமோகமான காலகட்டமாக இருக்கும். சந்தோஷமும், பொருளாதாரமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு உங்களுக்கு ஏற்பத்தைக் கொடுக்கும். அற்புதமான வாரமாக இந்த வாரம் உங்களுக்கு அமையும்.
-
Meenam: மீன ராசியினரே கவனம்!.. ஜூன் மாதத்தில் வரப்போகும் சோதனைகள் என்ன? -
ராஜயோகம் பெறும் கடக ராசி.. ஜூன் மாதத்தில் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications