Rasi Palan This Week: துலாம் ராசியின் ஆட்டம் ஆரம்பம்.. திட்டமிட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி வெற்றி
வார ராசி பலன்: ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரையிலான ஆவணி 9 முதல் ஆவணி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு
அந்த வகையில், ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் நல்ல ஏற்றம் பெறுவீர்கள். பண வரவு அற்புதமாக இருக்கும். அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். இதுவரை எந்த காரியத்தை தொட்டாலும் அதனை முடிக்க முடியாமல் பாதிக்கப்பட்டிருப்பீர்கள்.
இனி தொட்டது துலங்கும்
ஆனால், இனி அந்த இழுபறியான நிலைகள் எல்லாம் படிப்படியாக மாறும் நல்ல காலகட்டமாக இருக்கும். தனிப்பட்ட முறையில் ஏற்றம் ஏற்படும். உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உறவு முறையில் காணப்பட்டு வந்த சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் தொடர்ச்சியாக இருந்து வந்த சங்கடங்கள், பாதிப்புகள் தீரும்.
ஆரோக்கியம்
குடும்பத்திலும், சமுதாயத்திலும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அபிராமி அந்தாதியில் 40,59, 75, 90 ஆவது பாடல்களை படிப்பது மன அழுத்தம். மன குழப்பம் போன்றவற்றை தீர்க்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற பிரச்சனைகளை பார்த்துக் கொள்ள வேண்டும். தோல் சம்பந்தப்பட்ட நோய்களில் கவனமாக இருக்க வேண்டும்.
பாராட்டு கிடைக்கும்
தொடர்ச்சியாக இருந்த நிம்மதியற்ற தன்மை படிப்படியாக மாறும். உங்களுடைய முடிவுகளால் பாராட்டைப் பெறுவீர்கள். அரசுத் துறையில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள் நல்ல ஏற்றத்தையும், நம்பிக்கையையும் பெறக்கூடிய வாய்ப்புள்ளது. முதலீடுகளுக்குப் பஞ்சம் இருக்காது. உத்தியோகத்தில் யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். வியாபாரத்தில் அனுகூலம் ஏற்படும்.
சிக்கல் தீரும்
உறவு முறையில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். மனதிற்குப் பிடித்த தெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். பண வரவிற்குப் பிரச்சனைகள் இருக்காது. இனி நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கக் கூடிய காலகட்டம் என்பதால் வரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications