ஆவணி மாத பலன்: ஜாவா சுந்தரேஷனாக மாறும் துலாம் ராசி.. முன்னேற்றம் மிகுந்த காலம்
Aavani matha palan: ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டின் ஆவணி மாதத்தில் துலாம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள், என்னென்ன நன்மைகள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. சூரியனின் இயக்கத்தை வைத்தே தமிழ் மாதங்கள் ஆரம்பமாகின்றன. அதன்படி, தலைமை கிரகமான சூரியன் ஆட்சி என்கிறது உயர்நிலை அமைப்போடு சிம்மத்தில் வலுவாக இருக்கப் போகிறார். இது விசேஷமான அமைப்பாகும். குரு மிதுனத்திலும், சனி மீனத்திலும், சுக்கிரன், புதனின் இயக்கங்கள் கடகத்திலும், சிம்மத்திலும் மாறியிருக்கின்றன.

கன்னியில் செவ்வாய் இருப்பது நல்ல விசேஷமான நிலையாகும். புதனில் குருவும், செவ்வாயும், கடகத்தில் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பது நல்ல அமைப்பாகும். கும்பத்தில் இருக்கும் ராகுவை குரு பார்ப்பது நல்ல மாற்றங்களைத் தரும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கிறது.
இந்த ஆவணி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். லாபாதிபதியாகிய சூரியன் இந்த மாதம் முழுவதும் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். லாபாதிபதி நல்ல இடத்தில் இருந்தாலே தொடும் காரியங்கள் அனைத்தும் கைகூடும் அமைப்பாக இருக்கும். 12 ராசிகளிலேயே துலாம் ராசிக்குத்தான் நல்ல கோச்சார கிரக நிலைகள் இருக்கின்றன.
கிரக நிலைகள்
11 இல் சூரியன், குரு, கேது இருக்கின்றனர். 9 இல் குரு இருக்கிறார். ராசிநாதனாகிய சுக்கிரன் 9, 10 ஆம் இடத்தில் இருக்கிறார். யோகாதிபதி புதனும் அங்கு இருக்கிறார். இந்த கிரக நிலைகள் உங்களுக்கு அற்புதமான யோகத்தைக் கொடுக்கும். 90 சதவீத துலாம் ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 10 சதவீதம் பேருக்கு பிறந்த ஜாதக அமைப்பிற்கு ஏற்றாற்போல 6, 8 தசாபுத்திகள் நடப்பவர்களுக்கு மட்டும் சில நன்மைகள் நடக்காமல் இருக்கிறது. ஆனால், அப்படிப்பட்டவர்களுக்கும் இந்த ஆவணி மாதம் அற்புதமாக இருக்கும்.
நல்லவை நடக்கும்
சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் தீரும். அண்ணன், அக்கா வாழ்க்கை சரியில்லை என்று கவலைப்படுபவர்களுக்கு அதுபோன்ற நிலைமைகள் மாறும். அவர்களுக்கு நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும். பெரிய சோதனைகள் கண்டிப்பாக இருக்காது. 12 இல் செவ்வாய் இருப்பதால் சகோதரர்களுக்கு நிறைய விரையச் செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
உதவி செய்யும் காலம்
சகோதர, சகோதரிகளுக்கு கொடுத்து உதவி செய்வதற்கான சூழல் ஏற்படும். சிலருக்கு வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்குவதற்காக செலவு செய்யும் அமைப்பு உண்டாகும். அரசாங்க அனுமதி, அரசாங்க அனுகூலங்கள் கிடைக்கும் அமைப்பு உண்டாகும். உங்களை விட உயர்ந்தவர்களிடம் இருந்து தற்செயல் நட்பு, தற்செயல் அறிமுகம் கிடைக்கும். அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேறும் அமைப்பு உள்ளது.
பெண்கள்
பெண்களுக்கு மிகச்சிறந்த நன்மைகள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். பெண்களுக்கு மிகச்சிறந்த நன்மைகள் ஏற்படும். கடந்த கால சோதனைகள், மன வேதனைகள் அனைத்தும் நீங்கும். காதல் தோல்வி அமைப்புகள் எல்லாம் மாறும். புதிய வாழ்க்கை, புதிய முன்னேற்றம் உண்டாகும். சிறப்பான யோகமான மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமையும்.
-
Dhanusu: தனுசு ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளும் நேரம்.. அள்ளிக் கொடுக்கும் குரு பகவான் -
Viruchigam: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி... குருவின் பார்வையில் கொட்டும் அதிர்ஷ்டம் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications