Thulam Rasi Palan: துலாமிற்கு சொத்துகளை குவிக்கும் யோகம்.. புது வீடு, புது கார்.. செட்டிலாக போறீங்க
சுக்கிர பெயர்ச்சி: சுக்கிரன் பகவான் 21.8.2025 தேதி மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். சுக்கிரன் 14.9.2025 தேதி வரை அங்கு தான் பயணிக்க போகிறார். சுமார் 25 நாட்கள் அவர் கடக ராசியில் இருந்து பலன் கொடுப்பார். பொதுவாக சுக போக வாழ்க்கைக்கு சுக்கிரன் அதிபதியாவார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் பதிவில் சுக்கிரன் துலாம் ராசிக்கு கொடுக்க போகும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் ஆகியவற்றை பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே உங்கள் ராசிநாதனான சுக்கிர பகவான் 10 ஆம் இடத்தில் அமரப் போகிறார். வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் உங்களுடைய எண்ண ஓட்டங்கள் அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்துவதும், சொந்த தொழிலை தொடங்குவது போன்ற யோகம் உண்டாகும். தொழிலின் மூலமாக மிகப்பெரிய உயர்வு ஏற்படும். தலைமைப் பண்பு அதிகரிக்கும். 11 ஆம் அதிபதியான சூரிய பகவான் ஆட்சி பலத்தோடு அமர்ந்திருப்பதால் தலைமைப் பண்பு, ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.

பதவி உயர்வு
பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல பதவி உயர்வு கிடைக்கும். சுக்கிரன் புதன் இணைவு பெற்றுள்ளதால் நல்ல பாக்கியங்கள் கிடைக்கும். வேலை, தொழில் சார்ந்த விஷயத்தில் உங்கள் நாட்டத்தை செலுத்துவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். சுக்கிர பகவான் 10 ஆம் இடத்தில் அமர்ந்துகொண்டு 4 ஆம் இடம் எனும் சுக ஸ்தானத்தை பார்ப்பதால் தாய் சார்ந்த விஷயங்களில் ஏற்றம் உண்டாகும்.
சொத்துகள் சேரும்
தாயின் சொத்துகள் வந்து சேரும். வீடு சம்பந்தப்பட்ட எண்ண ஓட்டத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலம் ஏற்படும். வீடு வாங்கும், கட்டும் யோகம் உண்டாகும். வாகனம் சார்ந்த விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். மனதுக்குப் பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு, இடத்தை வாங்கி விற்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமண யோகங்கள் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் யோகம் உள்ளது.
வேலைவாய்ப்பு
ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் குழந்தையைப் பற்றிய சிந்தனை ஓட்டங்கள் அதிகரிக்கும். குழந்தைகளின் படிப்பு சார்ந்த விஷயங்கள், வேலை சார்ந்த விஷயங்கள் அனைத்தும் சிறப்பு பெறும். சுக்கிரன் சனியின் நட்சத்தில் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை பயணிப்பதால் சுகத்தைப் பெருக்குவீர்கள். வேலைவாய்ப்பு உருவாக்கித் தரும். புதிய வேலைகள் கிடைக்கும்.
தொழில்
வேலை, தொழில் சார்ந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். கடன் வாங்கி தொழில் செய்யும் யோகம் உள்ளது. செப்டம்பர் 4 முதல் 14 ஆம் தேதி வரை சுக்கிரன் ஆயில்யம் நட்சத்திரத்தில் பயணிப்பதால் தொழில், வேலை, அபிவிருத்தி, பாக்கியம், கெளரவம், ஆன்மீக எண்ணம் போன்றவை உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
வெளிநாடு யோகம்
வெளிநாட்டுக்குச் செல்லும் யோகம், அங்கு வேலை செய்யும் யோகம், புத்தி அறிவை வைத்து செய்யக்கூடிய அமைப்புகள், சந்தர்ப்பங்கள் ஏற்படும். மாமன் சார்ந்த எண்ணங்கள், தந்தை சார்ந்த எண்ணம் ஏற்படும். தந்தையின் தொழிலை எடுத்துச் செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். திடீர் பதவி உயர்வு, இடமாற்றம், குழந்தை பாக்கியம், திருமண யோகம், சொந்த வீடு வாங்குவது போன்ற நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும்.
வழிபாடு
சுக்கிர ஜெயந்தியன்று நவக்கிரகத்தில் இருக்கும் சுக்கிரனுக்கு வெண்பட்டு சாற்றி, 6 நெய்விளக்கு தீபமேற்றி வழிபாடு செய்வது ஏற்றத்தையும், வளர்ச்சியையும் ஏறபடுத்திக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications