Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு சித்திரையில் அடிக்கும் ஜாக்பாட்.. இதை மட்டும் மறந்தும் பண்ணிடாதீங்க
Thulam Rasi Palan: சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில், துலாம் ராசியினருக்கு இந்த மாதம் புதிய வாய்ப்புகளும் சில முக்கிய மாற்றங்களும் காத்திருக்கின்றன. தொழில், பணவரவு, உறவுகள் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்களை இங்கே பார்க்கலாம்.
சித்திரை மாதம் 2026 மற்றும் பராபவ தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது. சூரிய பகவான் மீன ராசியிலிருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சியாகியுள்ளார். இந்த சித்திரை மாதத்தில் அட்சய திருதியை நன்னாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கல் உப்பு, அரிசி, பருப்பு வாங்குவது நன்மையைத் தரும். மே 4 முதல் 28 ஆம் தேதி வரை கடும் வெயில் நிலவும்.

பராபவ வருடத்தின் முதல் மாதமான இந்த சித்திரை மாதத்தில் ஒவ்வொரு ராசியினருக்கும் நற்பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த சித்திரை மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
துலாம் (Thulam Rasi Palan)
துலாம் ராசியினருக்கு துணையிடம் எந்தப் பிரச்சனையிலும் ஈடுபடாமல் மிகவும் இணக்கமாகச் செல்வது நல்லது. மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவது, உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் என்ன கூறினாலும் துணையைப் பற்றி சாதரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடன் தீரும்
பழைய கடன்களை அடைப்பதற்கான உங்கள் முயற்சிகள் வெற்றியைத் தரும். புதன்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது பெரிய வெற்றியைக் கொடுக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும். பயணங்கள் மூலமாக அனுகூலம் ஏற்படும். விட்டமின் குறைபாடு, கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் உரிய மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நன்மை பயக்கும்.
அனுகூலம்
எல்லா விஷயங்களிலும் அனுகூலம் ஏற்படும். புதிய பொறுப்புகள், புதிய சந்தோஷம், புதிய ஏற்றம், கெளரம் ஏற்படுவதற்கான அற்புதமான அமைப்பு உள்ளது. பதட்டமில்லாமல் நிதானமாக செயல்படுவது ஏற்றத்தைத் தரும். இழுபறியாக இருந்து வந்த எல்லா நிலைமைகளும் பெரிய அளவிலான நம்பிக்கையை ஏற்படுத்தும். முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
பண வரவு
தொழில், வியாபாரத்தில் அற்புதமான லாபங்கள் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பாக இருக்கும் வியூகத்தில் நல்ல பலன் கிடைக்கும். உங்களுடைய அணுகுமுறை மற்றும் ஆலோசனைகள் பிறருக்கு உதவியாக இருக்கும். மற்றவர்களின் நல்ல செயல்களைப் பாராட்டுவீர்கள்.
வழிபாடு
ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். புற்றுள்ள கோயில்களில் அம்மன் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். முதுகு தண்டுவடம், கழுத்துப் பகுதியில் சுழுக்கு போன்ற பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும்.
-
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
2026 குருப்பெயர்ச்சி: குரு பகவானின் அருளால் மீன ராசிக்கு வாழ்க்கை மாறப் போகிறது! -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Mithunam Rasi Palan: கொடிகட்டி பறக்கப்போகும் மிதுன ராசி.. தொட்டது துலங்கும் யோகம் -
Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு இந்த வாரம் காத்திருக்கும் மாற்றம்.. எந்ததெந்த விஷயங்களில் கவனம்? -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு ஜூன் 7க்குள் வரப்போகும் குட்நியூஸ்.. அதிர்ஷ்டம் காத்திருக்குது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications