Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு புது தொழில், நகை, பண வரவு.. அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்
வார ராசி பலன்: ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)
துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு ஏற்றம், நம்பிக்கை, அனுகூலம் ஏற்படும். நவக்கிரகத்தில் இருக்கும் ராகு வழிபாடு நன்மையைத் தரும். துர்க்கை வழிபாடு, துர்க்கை கவடம் கேட்பது, படிப்பது ஏற்றத்தை ஏற்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளுடன் இருந்து வந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும். சந்தோஷம் உண்டாகும்.
பணவரவு
நண்பர்களுடன் வெளியூர், உள்ளூர்களுக்கு சென்று வருவீர்கள். நிறைய செலவுகள் ஏற்படும். ஆனால், பணம் வந்து கொண்டே இருக்கும். பிள்ளைகள், குடும்பத்தினர், உறவுகள் என யாரோ ஒருவரிடமிருந்து பணம் வந்து கொண்டே இருக்கும். மகிழ்ச்சியாக இருக்கும் காலகட்டம். தேவையில்லாதவற்றை யோசித்துக் கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும்.
கவனம்
நிறைய நல்ல காரியங்கள் ஏற்படும். அவற்றை கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. நம்பிக்கையும், தைரியமும் ஏற்படும். தொடர்ச்சியாக இருந்து வந்த மன தாங்கல்கள் நீங்கும். பயணங்களின்போது கவனமாக இருக்க வேண்டும். ஆண்களாக இருந்தால் பெண்களும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
ஆடை ஆபரணம்
அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். ஆடை, ஆபரணங்களை வாங்கி குவிக்கும் காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் அற்புதமன முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டு. ஏற்கனவே தொழில் இருந்தாலும் இன்னொரு தொழிலைத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் உறவுகள் உங்களை கண்டு கொள்ளவில்லை என தேவையில்லாமல் யோசிக்க வேண்டும். எல்லோரும் உங்கள் மீது அக்கறையுடனேயே இருப்பார்கள்.
பொருளாதாரம்
நிறைய விரயங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். இந்த விரயங்கள் குறைய வியாழக்கிழமை தோறும் மதிய வேளைகளில் உணவு தானமாக கொடுப்பது நல்ல மேன்மை ஏற்படும். பண வரவுக்கு எந்த குறைவும் இருக்காது, பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். முதலீடுகளுக்கு குறைவிருக்காது. ஏற்றமும், நன்மைகளும் உண்டாகும்.












Click it and Unblock the Notifications