Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஹிட்டு.. அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும்

Subscribe to Oneindia Tamil

Thulam Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

thulam-rasi-palan-what-kind-of-benefits-will-get-thulam-rasi-people-from-february-16-to-22

மாசி மாதம் பிறந்துள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)

துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு சுப விரயம் உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் அனுகூலங்கள் ஏற்படும். துணையுடன் இருந்து வந்த மனத் தாங்கல்கள் தீரும்.

சுபகாரியங்கள்

எதிர்பார்த்த அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும். எல்லா விதமான சுப காரியங்களும் அடுத்தடுத்து நடக்கும். குடும்பத்தில் இருக்கும் பிணக்குகளையும், சங்கடங்களையும் நீங்களே இறங்கி சரிசெய்து கொள்வது நல்லது. இல்லையெனில் பின்னாளில் தேவையில்லாத சங்கடங்கள் மனக்கஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

ஏற்றம்

சனி 6 ஆம் இடத்தில் இருப்பதால் அனைத்து விதத்திலும் ஏற்றத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்துவார். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் ஏற்றம், அனுகூலம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும்.

யோக பலம்

தாய் வழி உறவு, தந்தை வழி உறவுகளில் கவனமாக இருக்க வேண்டம். வயிறு சார்ந்த பாதிப்புகளில் உரிய மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. தூக்கத்தை கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நன்மையை ஏற்படுத்தும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளை முடித்துக் கொள்வது நன்மை பயக்கும். யோக பலத்தை அதிகமாகப் பெற்றுத் தரும் காலகட்டம்.

வீடு, நிலம் வாங்கும் யோகம்

வீடு வாங்குவது, நிலம் வாங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும். இடத்தை மாற்றுவது, மோட்டார் மாற்றுவது, வங்கிகளை மாற்றுவது, வேலை, துறை மாற்றுவது போன்றவை ஏற்படும் வாரம். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களிலும் வெற்றிகள் ஏற்படும். பெரிய மாற்றங்கள் ஏற்படும் காலகட்டம். தேவையில்லாத செலவுகள், தேவையில்லாத மன வருத்தமும் இந்த வாரத்தின் இறுதியில் ஏற்படும்.

வழிபாடு

பெரியவர்கள் விஷயத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அபிராமியில் 40, 59, 75 ஆவது பாடலைப் படிப்பது ஏற்றத்தைத் தரும். நாகராஜ சுவாமி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதாரமும் 85 சதவீதம் ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+