செவ்வாய் பெயர்ச்சி பலன்: துலாம் ராசிக்கு சொந்த வீடு வாங்கும் யோகம்.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூலை 28 முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் செவ்வாய்ப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த செவ்வாய் பெயர்ச்சியின்போது துலாம் ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் பகவான் சகோதரக்காரகன். நிலம், பூமிக்கு அதிபதியானவர். ரத்தத்துக்கும், ஆக்ரோஷத்துக்கும், கோபத்துக்கும் காரணமானவர். கட்டிடம், நெருப்பு, சிவப்பு நிறம், உடற்பயிற்சி, விளையாட்டுத் துறைக்கு தொடர்பானது செவ்வாய் கிரகம். இந்த செவ்வாய் பகவான் ஜூலை 28 ஆம் தேதி சிம்மத்தில் இருந்து கன்னி மனைக்கு பெயர்ச்சி ஆகப்போகிறார். செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி வரையிலான 48 நாட்கள் கன்னியில் இருந்து செவ்வாய் பகவான் பலனைக் கொடுக்கப் போகிறார்.

இந்த காலகட்டத்தில் உத்திர நட்சத்திரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை சூரிய பகவானின் நடசத்திரத்தில் பயணம் செய்கிறார். ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அஸ்தம் எனும் சந்திரனின் நட்சத்திரத்திலும், செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தனது சொந்த நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் பயணம் செய்யப் போகிறார்.
இந்த செவ்வாய்ப் பெயர்ச்சி காலகட்டத்தின்போது துலாம் ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்கள், மாற்றங்கள் நமக்கு கிடைக்கும். எந்த தெய்வ வழிபாடு உகந்தது என்பது குறித்து பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் 2க்கு உரியவர். குடும்பம், தனம், வாக்கு ஸ்தானத்தின் அதிபதி. தற்போது 12 ஆம் இடத்தில் செவ்வாய் மறைந்திருக்கப் போகிறார். திருமண ஸ்தானத்தின், கூட்டாளிகள் ஸ்தானத்தின் அதிபதியாகவும் உள்ளார். விரைய ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் பணம் விரையமாகும். சுப விரையங்களை அதாவது சுப விஷயங்களைச் செய்து கொள்வது நல்லது. குழந்தைகளின் படிப்பு, ஆசைகளை நிறைவேற்றுவது, முதலீடு போன்றவற்றைச் செய்து மகிழ்வீர்கள்.
வீடு வாங்கும் யோகம்
வீடு, நிலம், இடம், வண்டி, வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். இடம் சார்ந்த விஷயங்களைச் செய்வதற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். திருமண செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வேலை நிமித்தமாக கணவன், மனைவி பிரிந்திருக்கும் வாய்ப்பு ஏற்படும். தன்னுடைய சொந்த ஊரை விட்டு வேலைக்காக, தொழிலுக்காக வெளியில் செல்லும் வாய்ப்பு ஏற்படும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். கூட்டாளிகள், கணக்கு சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
அரசு சார்ந்த விஷயங்கள்
வாக்குறுதிகள் கொடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பேசும் பேச்சுகளை ஒருமுறைக்கு இருமுறை பார்த்து பேசுவது நல்லது. பணத்தைக் கையாளும் விஷயங்களில் கவனம் தேவை. மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது. ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் செவ்வாய் பயணிக்கிறார். இந்த காலகட்டத்தில் ஒரு சிலருக்கு அரசாங்கம் சார்ந்த விஷயங்களில் நன்மை, அரசின் மூலம் பணம், புகழ், அதிகாரம், அங்கீகாரம் கிடைக்கும்.
வெளிநாடு
ஒரு சிலருக்கு அரசு சார்ந்த அதிர்ஷ்டம், அங்கீகாரம், அதிகாரம் கிடைக்கும். வேலையில் இருக்க கூடியவர்களுக்கு வெளிநாடு, வெளிமாநிலத்தின் மூலம் நன்மை கிடைக்கும். செவ்வாய் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அஸ்தம் நட்சத்திரத்தில் பயணிப்பதால் தொழிலைப் பற்றிய சிந்தனை ஓட்டங்கள் அதிகமாக இருக்கும். தாயின் உடல்நிலை, தாய் குறித்த சிந்தனைகள் ஏற்படும். தொழிலுக்காக எடுக்கக்கூடிய முயற்சிகள், செய்யும் மாற்றங்கள், அபிவிருத்தி செய்வது, கிளைகள் அமைப்பது போன்றவற்றில் நன்மை உண்டாகும்.
மாற்றம், முன்னேற்றம்
சமுதாயம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவீர்கள். மாற்றங்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். வேலை மாற்றம், உத்தியோக மாற்றம், ஊர் மாற்றம் போன்ற மாற்றங்கள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். விற்காமல் இருந்த தாயின் சொத்துகள் விற்கும் யோகம் உண்டாகும். செப்டம்பர் 3 முதல் 12 ஆம் தேதி வரை செவ்வாய் தனது சொந்த நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் பயணிக்கும்போது கணவன், மனைவி சார்ந்த விஷயங்களில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
கோபம் வேண்டாம்
கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு வருவதற்கான வாய்ப்புள்ளது. அரசு சார்ந்த கணக்கு வழக்குகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பணம் யாருக்காவது வெளியில் கொடுத்தால் திரும்பி வருவதில் தடைகள் உண்டாகும். கோபம், ஆக்ரோஷம் வருவதற்கான வாய்ப்புள்ளதால் அதனை கட்டுப்படுத்துவது நல்லது.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications