This week rasi palan: துலாம் ராசிக்கு தொழிலில் ஆச்சரியமான மாற்றம்.. பணமழையில் நீச்சலடிக்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: ஆகஸ்ட் 10 முதல் 16 ஆம் தேதி வரையிலான ஆடி 26 முதல் ஆவணி 1 வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

thulam-this-week-rasi-palan-what-kind-of-benefits-thulam-libra-people-will-get-from-august-10-to

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு

அந்த வகையில், ஆகஸ்ட் 10 முதல் 16 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம்

துலாம் ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு பயணங்கள் அதிகளவில் ஏற்படும். கெளரவங்கள், மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். ஆலயத் திருப்பணிகள், தான தர்மங்களைச் செய்வீர்கள். வீடு, நிலம், வாகனங்கள், வண்டி சார்ந்த விஷயங்களில் சாதமான சூழ்நிலை ஏற்படும். அரசு சார்ந்த சொத்துக்கள் சேருவது, அரசால் லாபம் கிடைப்பது, அரசு பதவிகள் கிடைப்பது, அரசு வேலை கிடைப்பது, அரசுக் கல்லூரிகளில் சீட்டு கிடைப்பது என அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

தொழிலில் முன்னேற்றம்

வாரத்தின் முதல் இரண்டு நாட்களில் மட்டும் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. சூரிய நமஸ்காரம் செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். வராத பணங்கள், எதிர்பார்த்துக் காத்திருக்கம் விஷயங்கள் எல்லாம் நடக்கும் காலகட்டமாக இருக்கும். தொழில் சார்ந்த விஷயங்களில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் படிப்படியாக மாறும்.

செல்வாக்கு கூடும்

அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 ஆகிய பாடல்களை படிப்பது நன்மையை ஏற்படுத்தி தரும். தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கைகொடுக்கும். பண வரவுக்கு உத்தரவாதம் ஏற்படும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சேமிப்புகளில் கவனம் செலுத்த தொடங்குவீர்கள்.

வெற்றி மேல் வெற்றி

தொடர்ச்சியாக இருந்த மனத் தாங்கல்கள் பரிபூணமாக நிவர்த்தியாகும். எந்த காரியத்தையும் செய்துவிடலாம் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. சமுதாயத்திலும், குடும்பத்திலும் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும் காலகட்டம். எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் அனைத்தும் அடுத்தடுத்து நடக்கும் யோகமான காலகட்டமாக இருக்கும்.

வழிபாடு

யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடியவர்களாக இருப்பீர்கள். மகான்கள் வழிபாடு, விசிறி சுவாமி வழிபாடு, ராகவேந்திரர், பாபாவை வழிபடுவது அனுகூலத்தை தரும். மகிழ்ச்சி ரீதியான 90 சதவீதமும், பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் 85 சதவீதமும் நன்றாக இருக்கும். வீர ராகவப் பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+