Rasi Palan This Week: துப்பாக்கிய பிடிங்க சார்.. துலாம் ராசி வாழ்க்கையில் ஜாக்பாட்
வார ராசி பலன்: செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான ஆவணி 16 முதல் ஆவணி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
அந்த வகையில், செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தில் அற்புதமான மாற்றங்கள் நிகழும். உத்யோகம், தொழிலில் அதிகளவு யோக பலன்கள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் படிப்படியாக நிறைவேறும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய பொறுப்புகள் தேடி வரும். தொழிலில் புதிய முயற்சிகள், அபிவிருத்தி மாதிரியான நற்பலன்கள் கிடைக்கும்.
சொந்த வீடு கனவு
குழந்தைகள் விஷயத்தில் இருந்த மனக்குறைகள் நீங்கி, அவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம் உள்ளிட்ட காரியங்களில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நீங்கள் இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றி மேல் வெற்றி குவியும். பணவரவு திருப்தியாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல உயர்வு காணப்படும். சுப காரியங்கள் நடைபெறும். சொந்த வீடு கனவு நிறைவேறும்.
கவனம்
மனதில் ஏதாவது குழப்பம் வந்து செல்லும். வாழ்க்கை துணையுடன் வீண் விவாதத்தை தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மாற்றத்திற்கு தகுந்த வகையில் உங்களை அப்டேட் செய்து கொள்ளுங்கள். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பிரச்சனை இருப்போர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறிய பிரச்சனையாக இருந்தால் கூட உடனடியாக மருத்துவமனை செல்வது முக்கியம்.
பரிகாரம்
நரசிம்மர் வழிபாடு முக்கியம். நவகிரக வழிபாடு தடைகளில் இருந்து நிவர்த்தியை கொடுக்கும். சனி பகவானுக்கு தீபம் ஏற்ற வழிபடுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் வீட்டு அருகே உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயில்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்வதால் வாழ்க்கையில் அருமையான முன்னேற்றம் ஏற்படும். அபிராமி அந்தாதி பாடல்களை ஜெபிப்பதும் நேர்மறையான சிந்தனையை அதிகரிக்க செய்யும்.
-
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?











Click it and Unblock the Notifications