விஜய்க்கு முதலமைச்சராகும் யோகம் உண்டா?.. பிரபல ஜோதிடர் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

TVK Vijay: 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான எதிர்பார்ப்பு இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. 2026 இல் விஜய் முதலமைச்சராகும் யோகம் உள்ளதா என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

குருப்பெயர்ச்சி, குரு அதிசாரப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி ஆகிய முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. மகர ராசியில் இருக்கம் சூரியன் மாசி மாதமான இந்த மாதத்தில் கும்பத்தில் இருக்கிறார். இதுபோல ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.

tvk-vijay-does-vijay-have-the-fortunes-to-become-the-chief-minister-prediction-by-a-famous-astro

உதயநிதி ஸ்டாலின்

விஜய், அண்ணாமலை ஆகியோர் கடக ராசியினர். எடப்பாடி பழனிசாமி கன்னி, ஸ்டாலின் சிம்மம், உதயநிதி ஸ்டாலின் ரிஷப ராசி. உதயநிதி ஸ்டாலினுக்கு வரும் மார்ச் மாதம் முதல் ராகு புத்தி சுக்கிரனில் மாறி, குரு புத்தி வருகிறது. குரு புத்தி வரும் வரை காத்திருந்து வேலைகளைச் செய்தால் களத்தில் கஷ்டப்படுவதற்கான வாய்ப்புள்ளது. மார்ச் மாதத்துக்குள் கூட்டணி போன்றவற்றில் முடிவெடுத்தால் வலிமையாக இருக்கும். உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல காலகட்டமாக இருக்கும். உதயநிதி ஸ்டாலினின் பலம் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய வலிமையைக் கொடுக்கும்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமிக்கு வரக்கூடிய குருப்பெயர்ச்சியில் குரு பகவான் பெரிய வலிமையைக் கொடுக்கப் போகிறார். மே முதல் ஜூன் வரை தான் குரு பகவான் வரப் போகிறார். அதற்குள் தேர்தல் வந்துவிடும். கன்னி ராசிக்கு 10 இல் குரு வருவதால் பதவியைக் கெடுக்க பார்ப்பதால் என்பதால் உடனடியாக கூட்டணி தொடர்பான வேலையை முடித்துக் கொள்வது நல்லது.

கும்பத்தில் ராகு, சிம்மத்தில் கேது இருக்கும்போது கூட்டணி விஷயங்களை ஸ்திரப்படுத்திக் கொள்வது நல்லது. இல்லையெனில், கூட்டணியில் இருப்பவர்கள் வேறு கட்சிக்கு மாறுவதற்கான வாய்ப்புள்ளது. சீட், செல்வாக்கு, ஆதாயம் போன்றவற்றை கூட்டணிக் கட்சிகள் பார்ப்பார்கள் என்பதால் முதலிலேயே பேசி முடித்து களத்தில் இறக்குவது நன்மை பயக்கும். கிரகங்கள் கெடுக்கும் முன்பு, கிரகங்களுக்கேற்ப நாம் செயல்படுவது நன்மை பயக்கும்.

எந்த கூட்டணி வலிமை பெறும்

எப்போதும் ஒரு ஆளுங்கட்சி ஐந்தாண்டுகளில் எல்லாரையும் திருப்திப்படுத்தியிருக்க முடியாது. நிறைய எதிர்ப்புகள் இருக்கும். இந்த எதிர்ப்புகளை அறுவடை செய்வதற்கு மற்றவர்கள் கூட்டணி அமைத்தாலும், இப்போது விஜய் ஒரு புதிய கூட்டணி வைத்து, சீமான் தனித்து நிற்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் எல்லாருடைய ஓட்டுகளும் பிரியும். திமுகவில் விஜய் எத்தனை ஓட்டுகளைப் பிரிக்கப் போகிறார், அதிமுகவில் இருந்து எத்தனை ஓட்டுகளைப் பிரிக்கப் போகிறார்கள் என்பதுதான் இதில் விஷயம்.

விஜய்

திமுகவில் இருந்து அதிக ஓட்டுகளை விஜய் பிரித்தால் பாஜக கூட்டணி வலிமை பெறும். அதிமுகவில் இருந்து விஜய் அதிக ஓட்டுகளைப் பிரித்தால் திமுகவுக்கு சாதகமான களமாக மாறும். விஜயின் பாதிப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சீமான் தனித்து நின்றால் அதே அளவுக்கு ஓட்டு வாங்குவார்களா என்பதைப் பார்க்க வேண்டும்.

விஜய்க்கு நீசபங்க ராஜயோகம் கட்டாயம் வேலை செய்யும். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு விஜய்க்கு நல்ல யோகம் உண்டு. விஜய்க்கு தான் செல்வாக்கு மிகப்பெரிய அளவில் நன்றாக இருக்கிறது. ஆனால், அவரை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு அவருடன் இருப்பவர்கள் ஒத்துழைப்பார்கள் என்பது தெரியாது. தனிப்பட்ட ரீதியாக விஜயின் ஜாதகம் பவர்ஃபுல்லாக இருக்கிறது. விஜய்க்கு நல்ல காலகட்டமாக இருக்கும். மார்ச் மாதம் வரைக்கும் உச்சம் தொடும் யோகம் உண்டு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+