Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. குரு பார்வையால் அதிர்ஷ்டம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஜூலை 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

viruchigam-rasi-palan-viruchigam-rasi-people-will-get-lots-of-good-news-from-july-6-to-12

ஆனி மாதத்தில் சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூலை 6 முதல் ஜூலை 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி துலாம் லக்கினம் சார்ந்த நபர்களுக்கு செவ்வாய், சந்திரன் இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் பார்வை பலத்தை கொடுப்பதால் எல்லா விஷயங்களிலும் ஜெயம் ஏற்படும். மற்றவர்கள் தவிர்க்க முடியாதவர்களாக இருப்பீர்கள். முக்கியமான விஷயங்களை செய்யத் தொடங்குவீர்கள். யாருக்காகவும், எதற்காகவும் பயப்படாத தன்மை ஏற்படும்.

சொத்துகள் சேரும்

மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். எல்லா விஷயங்களையும் எளிமையாக முடிக்கக்கூடிய யோகம் உண்டாகும். வேலையில் நிறைய தடைகள், சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உடன் பணியாற்றும் பெண்களால் பிரச்சனை வருவது, யாரோ செய்த குற்றத்துக்கு நீங்கள் சிக்கும் சூழல் ஏற்படும். பூர்வீக சொத்துகள் கிடைப்பதற்கான யோகம் உண்டாகும்.

குரு பார்வை

சனிக்கு குருவின் பார்வை கிடைப்பதால் சொத்துகள் சேரும் யோகம் உண்டு. திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பண வரவு நன்றாக இருக்கும். வீடு, வண்டி, வாகனங்கள், சொத்துகளை விற்பனை செய்ய விரும்புவோர் விற்பனை செய்யும் அமைப்பு ஏற்படும். வாழ்க்கை துணைக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.

சிக்கல் தீரும்

தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, குடும்பம், காதல் அமைப்பில் ஒருவிதமான மன கசப்புகள் காணப்படும். சக்கரத்தாழ்வார் வழிபாடு, மந்திரங்களை கேட்பது சிறந்த பரிகாரமாகும். தொழில் ரீதியாக காணப்பட்டிருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எல்லா விதமான கஷ்டங்களும் சிறிது காலத்திற்குப் பிறகு பரிபூரண நிவர்த்தியாகும்.

வாக்குவாதம் வேண்டாம்

உறவுகளுடன் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் நிறைய நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் விருச்சிகம் இருந்தால் நிச்சயமாக நிறைய நன்மைகள் நடக்கும். பெற்றோர், பெரியோர், வண்டி, வாகனத்திலும், ஆரோக்கியத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

முன்னேற்றம்

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். தொழிலில் சிறு சிறு தடைகள் காணப்படும். ஜிஎஸ்டி, கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்வது ஏற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+