Viruchigam: விருச்சிக ராசிக்கு இனி சிங்கப் பாதை தான்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு

Subscribe to Oneindia Tamil

March month rasi palan: மார்ச் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் விருச்சிக ராசியினருக்கு மார்ச் மாதத்தில் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மார்ச் மாதத்தில் கும்ப ராசியில் ராகு, செவ்வாய், புதன் ஆகிய கிரகஹ்கள் மாதம் முழுவதும் அங்கேயே இருக்கின்றன. குரு பார்வையில் இருப்பதால் பெரிய அளவில் முன்னேற்றத்தைத் தரும். மாதத்தின் பிற்பகலில் சுக்கிரன் உச்சத்தை அடைகிறார். குருவுக்கு நிகரான மிகப்பெரிய சுபரான சுக்கிரன் உச்சத்தை அடைவதால் பெண்கள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். பெண்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டக் கூடிய தன்மை ஏற்படும். [Viruchigam]

viruchigam-rasi-palan-what-kind-of-benefits-will-get-viruchigam-rasi-people-during-this-march-month

ஆண்களால் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். சனி பகவான் உச்ச சுக்கிரனோடு சேர்ந்து சுபத்துவத்தை அடைவதால் தொழிலாளர் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தினருக்கு நன்றாக இருக்கும் காலகட்டம். சிலருக்கு காதல் மலரும். அந்த வகையில் இந்த மார்ச் மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.

விருச்சிகம் மார்ச் மாத பலன்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்பு நன்மைகள் தரக்கூடிய மாதமாக இருக்கும். 4, 8, 12 ஆகிய 3 இடங்களும் கூடுதல் சுபத்துவத்தில் இருக்கின்றன. 8 ஆம் இடத்தில் குரு பகவான் இருந்து மாதம் முழுவதும் ராசிநாதனைப் பார்க்கிறார். ராசிநாதன் 4 ஆம் இடத்தில் ராகுவுடன் இருந்தாலும் மிக அருமையாக குருவின் பார்வையில் இருப்பதால் அந்நிய இன, மத, மொழி பேசக்கூடிய ஒருவரின் மூலமாக கண்டிப்பாக நன்மைகள் கிடைக்கும்.

சிறப்பு நன்மை

புதிய வேலையோ, பணமோ, தொழிலோ, வியாபாரமோ என ஏதோ ஒரு உதவி கிடைக்கும் காலகட்டம். சமீபத்தில் பழகியவரின் மூலமாக சிறப்பு நன்மைகளைப் பெறக்கூடிய காலகட்டம். 8, 12 ஆம் இடங்கள் வலுத்திருப்பதால் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான தொழில்கள் இனி நன்றாக இருக்கும். கடந்த 6, 7 மாதங்களாக இந்த தொழிலில் இருப்பவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்திருப்பீர்கள். குழப்பம் கொள்ளத் தேவையில்லை.

வருத்தங்கள் நீங்கும்

ஒன்று கிடைக்கவில்லை எனில் இன்னொன்று கிடைக்கும் என்கிற நம்பிக்கைள் ஏற்படும். பிள்ளைகள் மேல் வருத்தத்தில் இருந்த அமைப்புகள் மாறும். பிள்ளை வேலையின், காதல், பழக்க வழக்கம், திருமணம் செய்து வைத்த பெண் நன்றாக இல்லை என வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அந்த வருத்தங்கள் எல்லாம் தீரும் காலகட்டம். சிறப்பான மாற்றங்கள், திருப்பங்கள் வரும் காலகட்டமாக இருக்கும்.

அரசு அனுமதி

புதிய நம்பிக்கை பிறக்கக்கூடிய மாதமாக இருக்கும். எதிர்பாராத உறவுகள், எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். முன்னர் விட்டுப் போன உறவுகள், நண்பர்கள் மீண்டும் வாழ்க்கையில் வரும் அமைப்பு உண்டு. அரசாங்கம் சார்ந்த விஷயங்கள், உயர் அதிகாரம் கொண்டவர்களின் பழக்கம் இருக்கும் அமைப்புகள் ஏற்படும். அரசு அனுமதி கேட்டு காத்திருந்தவர்களுக்கு அதற்கான அனுமதிகள், வாய்ப்புகள் கிடைக்கும்.

முன்னேற்றம்

முன்னேற்றத்தை எதிர்பார்க்கக் கூடிய மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமையும். பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். பண வரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். குலதெய்வ வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பெறும் நல்ல காலகட்டம் எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும் நல்ல மாதமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+