Viruchigam Rasi Palan: திடீர் அதிர்ஷ்டத்தை அள்ளும் விருச்சிக ராசி..பணம் கூரையை பிச்சுகிட்டு கொட்டும்
வார ராசி பலன்: ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)
விருச்சிகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பிள்ளைகளின் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடைய படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். ரத்தத்தில் பரவும் நோய்கள், தொற்று நோய்கள். வயிறு தொடர்பானபாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஜீரண குறைபாடு ஏற்படும்.
பணவரவு
பண வரவு அற்புதமாக இருக்கும். அனுகூலம் ஏற்படும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். தன வரவு அற்புதமாக இருக்கும். ஏற்றம் உண்டாகும். தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு கூடும். உத்தியோகத்தில் அபரிமிதமான ஏற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் படிப்படியாக மாறும். கனவுகளில் தெய்வங்கள் வரக்கூடிய அமைப்பு உள்ளது.
யோகம்
விடுபட்ட குலதெய்வ வழிபாடுகளை செய்து மகிழ்வீர்கள். நல்லவை எல்லாம் நடக்கும் காலகட்டம். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். குரு பார்வை இல்லையெனினும், நல்ல விஷயங்கள் எல்லாம் நடக்கும். ஒருவிதமான பதட்டம் இருந்து கொண்டே இருக்கும். மகான்கள் தரிசனம் ஏற்படும். அறுபடை கோயில்களுக்கு தரிசனம் சென்று வருவீர்கள்.
வழிபாடு
ரத்தபந்த உறவுகளை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். நிறைய பிரஷர் ஏற்படும். 6 ஆம் இடத்தில் சுக்கிரனும், அஷ்டம ஸ்தானத்தில் குருவுக்கும் சந்திர பார்வை இருப்பதால் எதிர்பாராத நட்பு ஏற்படும். எதிர்பாராத தன பிராப்தம் உண்டு. முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பிரச்சனைகளில் இருந்து வெளிவருவீர்கள். ஏதாவதொரு முருகர் கோயில்களுக்கு, மலைக் கோயில்களுக்குச் சென்று வருவீர்கள். நவக்கிரகத்தில் இருக்கும் செவ்வாய், குரு வழிபாடு பெரிய அளவிலான ஏற்றத்தைத் தரும்.
தானம்
விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கேட்கும் இடத்தில் கடன் கிடைக்கும். கடன்களை திருப்பி அடைக்கும் யோகம் ஏற்படும். எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் இந்த வாரம், இந்த மாதத்தில் நடக்கும். மிகுந்த கவனமாக இருக்கக்கூடிய மாதமாக இருக்கும். கண்ணாடி தானம் செய்வதாக வேண்டிக் கொள்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications