Rasi Palan This Week: சிக்ஸர் அடிக்கும் விருச்சிக ராசி.. நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு
Viruchigam Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். அந்த வகையில், மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)
விருச்சிகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். யோக பலத்தை அதிகமாகப் பெறும் காலகட்டம். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் பரிபூரண நிவர்த்தியாகும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் அனுகூலம் காணப்படும்.
பொருள் சேர்க்கை
கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய இனிமையான சூழ்நிலை ஏற்படும். சுப விரய பிராப்தம் உண்டாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். ஆடம்பரப் பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் ஏற்படாது. தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
வீண்வாதம் வேண்டாம்
எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் அற்புதமான ஏற்றம் உண்டாகும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்ல ஏற்றம் ஏற்படும். லாபம், சந்தோஷம், அனுகூலம் ஏற்படக்கூடிய அமைப்பு. குடும்பத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகளில் தாய் வழி உறவு, தந்தை வழி உறவு, ரத்த பந்த உறவுகளில் வீண் வாதம் வைத்துக் கொள்வது, சண்டை போடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
ஏற்றம்
எல்லா விதத்திலும் ஏற்றம் காணப்படும். தூக்கத்தில் தேவையில்லாத பதட்டம் காணப்படும். இரவு நேரத்தில் தூக்கத்திறக்கு முன்பு தொலைபேசியை தூரம் வைத்துவிட்டு தூங்குவது நல்லது. குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது ஏற்றத்தைத் தரும். வளர்ப்புப் பிராணிகள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. பொருளாதாரத்தில் அற்புதமான ஏற்றம் உண்டாகும். பேராற்றலும், சந்தோஷமும் ஏற்படும்.
வழிபாடு
படபடப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை, ரத்தத்தில் பரவும் நோய் பாதிப்புகளில் அதிக கவனமாக இருக்க வேண்டும். வாராஹி, சூளினி, பிரித்யுங்கரா வழிபாடு ஏற்றத்தையும், பலத்தையும் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications