Viruchigam Rasi Palan: விருச்சிகத்துக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கு.. அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன்
சுக்கிர பெயர்ச்சி: சுக்கிரன் பகவான் 21.8.2025 தேதி மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். சுக்கிரன் 14.9.2025 தேதி வரை அங்கு தான் பயணிக்க போகிறார். சுமார் 25 நாட்கள் அவர் கடக ராசியில் இருந்து பலன் கொடுப்பார். பொதுவாக சுக போக வாழ்க்கைக்கு சுக்கிரன் அதிபதியாவார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் பதிவில் சுக்கிரன் விருச்சிகம் ராசிக்கு கொடுக்க போகும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் ஆகியவற்றை பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்கு 9 ஆம் இடத்தில் சுக்கிரன் அமரப் போகிறார். 7க்கு உரியவர் திருமணம், விரைய ஸ்தானத்தின் அதிபதியான சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமரப் போகிறார். இனி திருமணத்தில் இருந்து வந்த பாதிப்புகள், தடைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். அடுத்தடுத்து திருமண பேச்சுகள், சுப காரியங்கள் நடக்கும் யோகம் உண்டாகும்.

அங்கீகாரம்
7 ஆம் இடம் என்பது கூட்டுத் தொழில், கணவன், மனைவி, சமுதாயத்தில் நாட்டம், அங்கீகாரம் கிடைக்கக் கூடிய காலகட்டம். பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் நல்ல நல்ல நண்பர்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். நண்பர்கள் மீண்டும் இணைவார்கள். அவர்கள் மூலமாக நல்லவை நடக்கும். கணவன், மனைவி இணைந்து சொந்த தொழில் தொடங்கலாம் என்ற எண்ணங்கள் உருவாகக்கூடிய காலகட்டம்.
திருமணம்
ஏற்கனவே கூட்டுத் தொழில் இருந்தவர்களுக்கு சங்கடங்கள் விலகும். விவாகரத்து பெற்றவர்களுக்கு 2 வது திருமணத்துக்கான எண்ண ஓட்டம் அதிகரிக்கும். கலைத் துறையில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இசை, கலை, கட்டுரை போன்ற கலைத் துறைக்குள் நுழையும் வாய்ப்புகள் ஏற்படும். அதே சுக்கிரன் தான் 12 க்கு உரியவர். சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பது நல்ல அமைப்பு. வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அந்த எண்ணங்கள் ஈடேறும் காலகட்டமாக இருக்கும்.
பணவரவு
தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டுக்குச் சென்று வரக் கூடிய பாக்கியம் ஏற்படும். ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை குருவின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிப்பதால் எதிர்பாராத பண வரவுகள் கிடைக்கும். பணம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகள் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பூசம் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்கும்போது, பயணங்கள் செய்யும் வாய்ப்பு ஏற்படும்.
மாற்றம், முன்னேற்றம்
வேலை மாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம் உண்டாகும் காலகட்டமாக இருக்கும். வியாபாரம் செய்வதற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும். ரியல் எஸ்டேட், வீடு, வண்டி, வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டு. வீடு வாங்கும் எண்ணம் அதிகளவில் தோன்றும். இடம் வாங்குவதற்காக தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டை புனரமைப்பீர்கள்.
பாக்கியங்கள்
செப்டம்பர் 4 முதல் 14 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பாக்கியத்தைப் பற்றிய சிந்தனைகள் அதிக அளவில் இருக்கும். குழந்தை, வேலை, பாக்கியம் குறித்த சிந்தனைகள் மேலோங்கும். பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய எண்ண ஓட்டம் அதிகரிக்கும். லாபங்கள், திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அக்கவுண்ட், ஆடிட்டிங்க தொடர்பான விஷயங்களில் நற்பலன்கள் கிடைக்கும்.
வழிபாடு
அரசாங்கம் தொடர்பான நல்ல பலன்கள் கிடைக்கும். நிர்வாகம், மேலாண்மை வெற்றியைத் தரும். செப்டம்பர் 16 ஆம் தேதி சுக்கிர ஜெயந்தி அன்று நவக்கிரகத்தில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு வெண்பட்டு சாற்றி வழிபாடு செய்வது மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி தரும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications