புத்தாண்டு 2025: சனி பகவானால் பயனடையப் போகும் 5 ராசிகள்.. அதிர்ஷ்டம் கொட்டி தீர்க்கப் போகுது
சென்னை: 2025 புத்தாண்டு புதிய நம்பிக்கையுடன் பிறந்துள்ளது. இந்த காலகட்டத்தில் சனி, குரு, ராகு - கேது, சுக்கிரன் உள்ளிட்ட பல கிரகங்களின் பெயர்ச்சிகள் உள்ளன. பொதுவாக சனி கொடுக்க நினைத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது என்பார்கள். அந்த வகையில் 2025 புத்தாண்டில் சனி பகவானால் பயனடைய போகும் ஐந்து ராசிகளை இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.
ரிஷபம்: சனி பகவான் மீனத்துக்கு பெயர்ச்சி அடைகிறார். அது உங்களுக்கு 11வது இடம். 11 என்பது லாபஸ்தானம். அதனால் உங்களுக்கு லாபங்களை அள்ளித் தரப்போகிறார். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். அலுவலகத்தில் உங்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். வேலைப்பளு நீங்கும். உங்களின் நீண்டகால கனவை நிறைவேறும் நேரம் இது.

உங்களுக்கு பிடித்த விஷயங்கள் ஒவ்வொன்றாக செய்வீர்கள். வியாபார விருத்தி இருக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவார்கள். சனி ஏழாம் இடமான யோகஸ்தானத்தை பார்க்க போகிறார். குழந்தை பாக்கியம், திருணம் வாய்ப்பு, வெளிநாடு பயணம் வெற்றிகரமாக நிறைவேறும். வீடு, மனை சொத்து வாங்குவதற்கான சூழலும் வரும்.
மிதுனம்: மிதுனம் ராசிக்கு சனி பத்தாம் இடத்துக்கு வரவுள்ளார். பத்தாம் இடத்தில் சனி இருந்தால் அரசனை போன்ற யோகம் வரும் என்ற பார்வை உள்ளது. பத்தாம் இடத்தில் உள்ள சனி பகவான் நான்காம் இடத்தைப் பார்க்கிறார். அதனால் நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு நிச்சயம் வரும். பெயர், புகழ் தேடி வரும். உங்கள் திறமைக்கான பாராட்டுகள் குவியும்.
உங்களின் பிரபலம் வெளியில் பரவும். மனதில் நேர்மறையான சிந்தனைகள் உருவாகும். அரசியல் வாதிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். தொட்டது துலங்கும். உதவி மனப்பான்மை அதிகரிக்கும். மனம் மகிழ்ச்சியால் துள்ளி குதிக்கும். உத்யோகத்தில் புதிய உச்சம் தொடுவீர்கள். வெளிநாட்டு பயணம் எதிர்பாராத பலன்களை கொடுக்கும்.
விருச்சிகம்: விருச்சிகம் ராசிக்கு சனி ஐந்தாம் இடத்தில் அமர்ந்துள்ளார். இதனால் பல்வேறு யோகங்கள் கிடைக்கும். சனி ஏழாம் இடத்தைப் பார்ப்பதால் திருமணம் வாய்ப்பு, குழந்தை பாக்கியம், வெளிநாட்டு பயணம் என்று நீங்கள் எதிர்பார்த்த எல்லாமே வெற்றிகரமாக அமையும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்களின் புகழ் அதிகரிக்கும்.
மேலும் சனி பகவான் லாபஸ்தானமான 11இம் இடத்தையும் பார்க்கிறார். இதனால் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சனி இரண்டாம் இடமான தனஸ்தானத்தை பார்க்கிறார். இதனால் பணவரவு அதிகரிக்கும். சுப செலவுகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். கவலைகள் நீங்கி மனம் நிம்மதியாக இருக்கும்.
கும்பம்: கும்பம் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சனி உள்ளார். சனி உங்களின் ராசிநாதனாக உள்ளார். இரண்டாம் இடம் என்பது தனஸ்தானம். இதனால் பணவரவு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பாராதளவுக்கு அதிர்ஷ்டம் கொட்டும். வீடு, மனை சொத்துகள் வாங்குவதற்கான சூழல் அமையும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும்.
வெளிநாட்டு பயணம் எதிர்பார்த்தபடி அமையும். முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருள்களை வாங்குவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றிகள் வந்து அதிர்ஷ்டம் கொட்டும்.
மீனம்: மீனம் ராசிக்கு ஜென்ம சனியாக உள்ளார். மூன்று, ஏழு, பத்து இடங்களை பார்க்கிறார். விடாமுயற்சியால் தடைகள் நீங்கும். குடும்ப வாழ்க்கையில் இணக்கமான சூழல் உருவாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் கைக்கூடும். இல்லறம் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும். காதல் உறவு வெற்றிகரமாக மாறும். உங்களின் பெயர், புகழ் அதிகரிக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications