வார ராசி பலன்: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினருக்கான பலன்கள்?.. பரிகாரங்கள்?.. முழு விவரம் இதோ
வார ராசி பலன்: பங்குனி மாதம் ஆரம்பிக்கிறது. மார்ச் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை பங்குனி மாதம் நடைபெறவுள்ளது. அந்த வகையில், பங்குனி மாதத்தில் மார்ச் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும், எந்த தெய்வங்களை வழிபட வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். இந்த கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் ஒவ்வொரு ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மார்ச் மாதத்தில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனி பகவான் சில ராசிகளுக்கு அபரிமிதமான நல்ல சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் தரப்போகிறார்.

மாதத்தில் சிறந்த மாதமான பங்குனி மாதம் தற்போது தொடங்கியுள்ளது. பங்குனி மாதத்தில் மார்ச் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை மேஷம், ரிஷபம், மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு விரையம் அதிகமாக நடைபெறும். வியாழக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு அல்லது ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது நல்ல பலன்களைத் தரும். துர்கையை வழிபடுவது அனுகூலமான பலன்களையும், ஜெயத்தையும் உண்டாக்கும். அசையும், அசையா பொருள்களின் சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான யோகம் உண்டு.
மனதுக்குப் பிடித்த நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்வீர்கள். மனம் பதைபதைப்பது குறையும். தொழில் மூலமாக நல்ல அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டாகும். தேவையில்லாத பிரச்சனைகள் அனைத்தும் குறையும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த இழுபறியான விஷயங்கள் மாறும். முதலீடுகள் கிடைக்கும். பணக் கஷ்டங்கள் தீரும். எப்போதும் வேலைகளையே செய்துகொண்டே இருப்பீர்கள். வேலை எல்லாம் குறைத்துவிட்டு உங்களுடைய சந்தோஷத்தையும் கொஞ்சம் பார்த்துக் கொள்வது நல்லது.
ரிஷப ராசி: அதிஅற்புதமான வாரமாக இந்த வாரம் இருக்கும். எல்லாமே ஏற்றமாக இருக்கும். இடமாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம், சுப காரியங்கள், தொழிலில் அனுகூலம் ஏற்படும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் நீங்கும். அடிமைத் தொழிலில் இருந்து சொந்த தொழில் செய்யும் யோகம். அடுத்தடுத்த நல்ல காரியங்கள் நடக்கும். வயிறு மற்றும் கழுத்து சார்ந்த பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
விஷ்ணு வழிபாடு உங்களுக்கு அனுகூலமான பலன்களையும், ஏற்றத்தையும் தரும். நிறைய பயணங்களை மேற்கொள்ளும் யோகம் உண்டாகும். குடும்பத்திலும், வெளி வட்டாரத்திலும் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவீர்கள். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மிதுன ராசி: அபரிமிதமான அனுகூலங்களை மிதுன ராசிக்காரர்கள் பெறப் போகின்றனர். அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் அனைத்தும் கைகூடும். உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான அற்புதமான காலகட்டமாக இருக்கும். திட்டமிடுதல், கூட்டுத் தொழிலில் இருந்து தனித்தொழில் தொடங்குவதற்கான சிறந்த காலமாக இருக்கும்.
ரத்தத்தில் நோய் பிரச்சனைகள் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சளி தொந்தரவுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெருமாள் வழிபாடு நல்ல பலன்களைத் தரும். வெங்கடேஸ்வர சுப்பிரபாதம் கேட்பது நல்லது. நல்ல முன்னேற்றங்கள், அனுகூலங்கள் ஏற்படும். பிரச்சனைகள் எல்லாம் பனிபோல விலகும் வாய்ப்புண்டு.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications