வார ராசி பலன்: பணத்தை அள்ளும் தனுசு, மகரம் ராசியினர்.. திடீர் அதிர்ஷ்டத்தால் ஏற்படும் மாற்றம்
வார ராசி பலன்: பங்குனி மாதத்தில் மார்ச் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும், எந்த தெய்வங்களை வழிபட வேண்டும், பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
மார்ச் மாதத்தில் ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். இந்த கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் ஒவ்வொரு ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில், மார்ச் மாதத்தில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனி பகவான் சில ராசிகளுக்கு அபரிமிதமான நல்ல சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் தரப்போகிறார். மாதத்தில் சிறந்த மாதமான பங்குனி மாதம் தற்போது தொடங்கியுள்ளது. பங்குனி மாதத்தில் மார்ச் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு - இந்த வாரத்தில் அதிக யோக பலன்களை பெறப் போகிறீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு உள்ளிட்ட சிறப்பான உயர்வுகள் கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய கடன்கள் வந்து சேரும். எதிரிகள் அமைதியாவார்கள்.
இறங்கிய அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தைரியம், தன்னம்பிக்கை உயரும். திடீர் அதிர்ஷ்டம், யோகம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. சுப காரியங்கள் நடக்கும். உத்யோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழிலில் புதிய முயற்சிகள் கைக்கூடும்.
மன சங்கடங்கள் நீங்கும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதி ஒன்றிணைவார்கள். கல்வியில் சிறந்த முன்னேற்றம் இருக்கும். பெற்றோர் மூலம் ஆதாயம் உண்டு. தடைகளை தகர்த்தெறிந்து எல்லா பிரச்னைகளையும் சகஜமாக சமாளிப்பீர்கள். உங்கள் வாக்குக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.
அக்கம், பக்கத்தினருடன் இருந்த பிரச்னை நீங்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் மட்டும் அதிக கவனம் தேவை. வயிறு, கழுத்து, முதுகு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் வந்து செல்லும். நவ கிரகத்தில் செவ்வாய் கிரகத்துக்கு விளக்கு ஏற்றி வழிபடுவது காரிய தடைகளை நிவர்த்தி செய்யும்.
மகரம் - வாழ்வில் மிகப்பெரிய ஏற்றம் காணப்படும். தொழிலில் இருந்த பிரச்னைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கி நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்யோகத்தில் உயர்வு கிடைக்கும். பணத்தட்டுப்பாடு நீங்கி பொருளாதாரத்தில் மேன்மை இருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பெற்றோர் வழி உறவில் ஆதாயம் காணப்படும்.
குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் உண்டு. உத்யோகம், தொழிலில் லாபம் இருக்கும். உங்களை சூழ்ந்துள்ள அனைத்து தடைகளும் தவிடு பொடியாகும். எதிர்பாராத இடத்தில் இருந்து திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். யாரின் உதவியும் இல்லாமலேயே ஆச்சர்யப்படுமளவுக்கு முதன்னேற்றம் இருக்கும்.
ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். வயிறு, கழுத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். பொறுமையாக இருப்பது நல்லது. வீண் விவாதத்தை தவிர்க்க வேண்டும். நவ கிரகத்தில் சுக்கிர பகவானை வழிபடுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
-
ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை -
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள்












Click it and Unblock the Notifications