வார ராசி பலன்: மேஷம், ரிஷபம் ராசிக்கு அடிச்ச ஜாக்பாட்?.. வாழ்க்கையே மாறப்போகுது
வார ராசி பலன்: பங்குனி மாதத்தில் மார்ச் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மேஷம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும், எந்த தெய்வங்களை வழிபட வேண்டும், பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
மார்ச் மாதத்தில் ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். இந்த கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் ஒவ்வொரு ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில், மார்ச் மாதத்தில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனி பகவான் சில ராசிகளுக்கு அபரிமிதமான நல்ல சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் தரப்போகிறார். மாதத்தில் சிறந்த மாதமான பங்குனி மாதம் தற்போது தொடங்கியுள்ளது. பங்குனி மாதத்தில் மார்ச் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் - எப்போதுமே நவக்கிரகத்தில் சூரியனை வழிபாடு செய்வது குடும்பத்தில் அனைத்துவிதமான நன்மைகளையும் தரும். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறும். தேக ஆரோக்கியத்தில் நன்மைகள் கிடைக்கும். சளி பிரச்சனைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தொழில் உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய முதலீடுகளை செய்வீர்கள்.
பணத் தட்டுப்பாடு நீங்கும். மேலதிகாரிகளை சந்திப்பது, குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடு நீங்கும். தூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். ஆக்கப்பூரவமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உடற்பயிற்சி அதிகம் செய்ய வேண்டும். பிள்ளைகள் விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளில் நிவர்த்தி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பு பெருகும். சகலவித ஏற்றங்கள், சந்தோஷங்கள் உண்டாகும். குடும்பத்தில் பிறர் தலையீடு இல்லாமல் இருப்பது நல்லது.
கோளார் பதிகத்தை சொல்லி வந்தால் கேதுவுக்கு, ராகுவுக்கும் இடையே இருக்கும் கிரக தோஷங்கள் நீங்கும். தடைகள் தவிடுபொடியாகும். அனைத்து விஷயங்களிலும் ஜெயம் ஏற்படும். வாகன விஷயங்களில் நிவரத்தி ஏற்படும். நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். முதலீடுகளுக்கு குறையில்லாமல் இருக்கும். பாதுகாப்பான முதலீடுகள் செய்து, அதில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள்.
ரிஷபம் - ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். திடீரென மயக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தெய்வ வழிபாடுகளை கடைப்பிடிப்பது நல்லது. நவக்கிரகத்தில் இருக்கும் புதன், கேது வழிபாடு நல்ல சந்தோஷம், நன்மைகளை ஏற்படுத்தி தரும். லாபம், சந்தோஷம், அனுகூலம் காணப்படும். பண வரவுக்கு உண்டான உத்திரவாதம் காணப்படும். தொழில் ரீதியாக இருந்த கஷ்டங்கள் தீரும்.
எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். முதலீடுகளில் குறை இருக்காது. பிள்ளைகளுடைய தொழில், படிப்பு, வேலை, வியாபாரம், துணையின் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு துறை, அரசியலில் இருப்பவர்கள் பெரிய பொறுப்புகளுக்கு வாருவார்கள். ஆச்சரியத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.
எதிர்பார்க்காத நன்மைகள், சந்தோஷங்கள், லாபம் தொடர்ச்சியாக இருக்கும். சிக்கல்களில் நிவர்த்தி ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம் ரீதியாக
அனுகூலம் ஏற்படும். ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய தொழில், வியாபாரம், படிப்பு ஒப்பந்தங்கள் ஏற்படும். ராசிநாதன் வலுத்துள்ளதால் தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதில் பிரச்சனை இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. அதிர்ஷ்டம் தரும் காலகட்டமாக உங்களுக்கு இருக்கும்.












Click it and Unblock the Notifications