வார ராசி பலன்: மேஷம், ரிஷபம், மிதுன ராசிக்கு அடிச்ச ஜாக்பாட்.. இந்த விஷயத்தில் கவனம் கவனம்
Weekly rasi palan: மார்ச் 31 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்கள், பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம் - சிவன் வழிபாடு சகல விதத்திலும் நன்மை, மகிழ்ச்சி, நிம்மதியை உண்டாக்கும். வயிறு, கால் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். முதலீடு விஷயங்களில் லாபம் கிடைக்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். மன அழுத்தத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக நிவர்த்தியாகும். அலைச்சல்கள் இருந்தாலும் பேச்சில் கனிவை கடைப்பிடிப்பது நல்லது.

நல்ல நண்பர்கள், வேலை ஆட்கள் கிடைப்பார்கள். மன நிறைவான வாரமாக இருக்கும். உள்ளூர், வெளியூர், தொலைதூரப் பயணங்கள் உண்டாகும். சந்தோஷமாக பயணங்களைச் செய்வீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். முதலீடுகளைச் செய்வீர்கள். தொழில் ரீதியாக மிகப்பெரிய சந்தோஷம் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம், படிப்பு, வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்ளும் யோகம் உண்டு.
மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். கொடுத்த வாக்கை காப்பற்றுவீர்கள். தெய்வீக வழிபாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படும். மன தைரியம், உற்சாகத்துடன் உள்ள நல்ல நண்பர்களை சந்திக்கும் இணக்கமான சூழலை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. பணம், தொழிலுக்காக ஓடிக் கொண்டே இருக்காமல் இருப்பது நல்லது. உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றை செய்வது நன்மை பயக்கும்.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு முருகர் வழிபாடு நம்பிக்கை, தைரியத்தை தரும். அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். அடுத்தடுத்து பிள்ளைகள், பெற்றோர், துணை விஷயங்கள் நடக்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உண்டாகும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். குடும்பத்தாருடன் ஆன்மிக சுற்றுலா, கடல் பயணங்களை மேற்கொள்வீர்கள். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் இருக்கும் மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.
உத்தியோகத்தில் நல்ல ஏற்றம் உண்டாகும். தாய் வழி, தந்தை வழி உறவில் மேன்மை ஏற்படும். தொழில் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் காண்பீர்கள். நம்பிக்கை, முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். வயிறு, கழுத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கை தேவை. எதிரிகள் விஷயத்தில் பதற்றம் ஏற்படும். ஆனாலும் வழக்கு போன்ற விஷயங்களில் சாதகமாக முடியும். மன வருத்தங்கள் அனைத்தம் நீங்கும். தொலைதூரத்தில் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கைகூடும். வியாபாரத்தில் காணப்பட்ட சிக்கல்களில் பரிபூரண நிவர்த்தி ஏற்படும்.
பெற்றோர், பெரியோரின் நீண்டநாள் கனவுகளை நிறைவேற்றிக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். 11 ஆம் இடம் கிரகங்கள் நிறைந்து காணப்படுகிறது. படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர் அனுகூலத்தைப் பெறுவார்கள். தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. எதிரிகளைப் பற்றி தவறாகப் பேசுவதை தவிர்பபது நல்லது.
மிதுனம் - ராகவேந்திரர் வழிபாடு சகல விதத்தில் நன்மைகளை, மகிழ்ச்சியை தரும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் காண்பீர்கள். ரத்தத்தில் பரவக்கூடிய தொற்றுநோய் உபத்திரவம் ஏற்படும். காய்ச்சல், சளி பிரச்சனை ஏற்படும். உத்தியோகத்தில் அதி அற்புதமான மாற்றங்கள் உண்டாகும். புது உத்தியோகம், வியாபாரத்தில், தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
சிக்கல்கள் தீரும் காலகட்டமாக இருக்கும். இழுபறியாக இருந்த நிலைமை படிப்படியாக மாறும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எடுத்த காரியங்கள் வெற்றியைத் தரும். உறவு முறையில் இருந்த சிக்கல்களில் பரிபூரண நிவர்த்தி ஏற்படும். பெரியோர் விஷயங்களில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. தொழிலில் புதிய மாற்றம் ஏற்படும். புதிய தொழில்களைத் தொடங்க சிறந்த காலமாக இருக்கும்.
கொடுத்த வாக்கை காப்பற்றக் கூடிய யோகம் உண்டாகும். வாரத்தின் கடைசி நாளான ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குவாதத்தில் ஈடுபட்டால் பெரிய பிரச்சனைகள், சண்டைகள் வரும் வாய்ப்புள்ளது. இந்த வாரத்தில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. வார்த்தைகளில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். இதை கடைப்பிடித்தாலே எல்லா விஷயங்களும் நன்றாக நடக்கும்.
பதவி உயர்வு, படிப்பில் இருந்த தடை நீங்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும் யோகம் உண்டாகும். வேறு படிப்பு படிக்கலாம் என்கிற மாணவர்களின் எண்ணம் நிறைவேறும். ராகேவந்திரர் மூல நாமத்தை சொல்லுவது ஜெயத்தை ஏற்படுத்தும்.
-
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications