மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. குட் நியூஸ் வீடு தேடி வரும்.. என்ஜாய்
வார ராசி பலன்: ஆடி மாதம் 17 ஆம் தேதி பிறக்கவுள்ளது. ஜூலை 14 முதல் 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதம் துவங்கப் போகிறது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு தாய் வழி, தந்தை வழி உறவுகளில் வரும் பிரச்சனைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருப்பது நல்லது. ரத்தபந்த உறவுகளே உங்களை அவமானப்படுத்தினாலும், கேவலப்படுத்தினாலும் அங்கிருந்து நீங்கள் நகர்ந்து செல்வது நல்லது. வீண் பேச்சு, தர்க்கம் செய்வதை தவிர்ப்பது நல்லது. மற்ற அனைத்து விஷயங்களிலும் நன்மைகள் கிடைக்கும்.
மாற்றம், முன்னேற்றம்
வெளியிடம், உத்தியோகம், வியாபாரம், தொழிலில் நல்ல மாற்றங்களும், முன்னேற்றமும் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் புதுப்புது உத்திகளைப் புகுத்துவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றியும், அனுகூலமும் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியும், மனமகிழ்ச்சியும் உண்டாகும் காலகட்டமாக இருக்கும்.
நல்ல செய்தி வரும்
இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை செய்து முடிக்காமல் இருந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். விடுபட்ட தெய்வ வழிபாடுகள், குல தெய்வ வழிபாடுகளைச் செய்து முடிப்பீர்கள். காது, மூக்கு, தொண்டை, சளி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து வருவது அற்புதமான மாற்றத்தை தரும்.












Click it and Unblock the Notifications