வார பலன்: மேஷ ராசிக்கு அடிச்ச ஜாக்பாட்.. சொந்த தொழில் ஆரம்பிக்கும் யோகம்.. பண மழை கொட்டப் போகுது
வார ராசி பலன்: ஆனி மாதம் 9 முதல் 15 ஆம் தேதி வரையிலான அதாவது ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது ஆகிய முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சியும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கிரகப் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் வயிறு சம்பந்தப்பட்ட ஏற்கனவே பிரச்சனைகள் இருந்தால் மிக கவனமாக இருப்பது நல்லது. பெருமாள் வழிபாடு உங்களுக்கு நற்பலன்களையும், நன்மையையும் ஏற்படுத்திக் கொடுக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக எடுத்த காரியங்களில் பின்வாங்காமல் முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் அருமையான காலகட்டம் இது.
பயணம்
உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்களை மேற்கொள்ளும் யோகம் உண்டு. அதன் மூலமாக மனதில் நல்ல தெளிவும், உற்சாகமும் ஏற்படும். மனதில் என்னவென்றே தெரியாமல் இருந்த சோகங்கள், பிரச்சனைகள் எல்லாம் தீரும். தொழில் ரீதியா முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். தொழில் மூலமாக நல்ல லாபத்தைக் காண்பீர்கள். ஏற்கனவே கூட்டுத் தொழில் செய்து வருபவர்கள் தனித்தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும்.
தடைகள் நீங்கும்
இதுவரை எடுத்த காரியங்களில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். மனதில் இருந்து வந்த அழுத்தம், பாரம் குறையும். நிம்மதியான தூக்கத்தைப் பெறுவீர்கள். உடற்பயிற்சியில் அதிக அளவிலான ஆர்வம் ஏற்படும். புதிய நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் உங்களைத் தாங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். அதன் மூலமாக நல்ல ஏற்றத்தைப் பெறுவீர்கள்.
மகிழ்ச்சி
இனி உங்கள் வாழ்க்கையில் புதுவித ஆரோக்கியமான சூழல் உருவாகும். புலம்பிக் கொண்டிருந்த அரசுத் துறை அரசியல்வாதிகளுக்கு இனி மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும். இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களைப் பிரச்சனையை உங்கள் பிரச்சனையாக நினைப்பதை மாற்றிக் கொள்வது நல்லது.
வாகன யோகம்
உங்கள் ஆரோக்கியம், உங்களுடைய வாழ்க்கையைப் பற்றி மட்டும் நினைத்து செயல்படுவது நல்லது. வாகனம், வண்டி வாகனங்களை மாற்றும் யோகம் உண்டாகும். மனம் தெளிவடையும். உற்சாகமான வாரமாக இந்த வாரம் உங்களுக்கு அமையும்.












Click it and Unblock the Notifications