கன்னி ராசிக்கு இந்த வாரத்தில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: அம்மனுக்குரிய ஆடி மாதம் தொடங்கியுள்ளது. இந்த வாரம் ஆடி 5 முதல் 11 ஆம் தேதி வரையிலான (ஜூலை 21 முதல் 27 வரை) கன்னி ராசிக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதான ஆடி மாதம் பிறந்துள்ளது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். இதுவரை எந்தவொரு செயலைச் செய்தாலும் அது இழுபறியாகவே இருந்து கொண்டிருந்திருக்கும். இனி அந்த நிலைமைகள் மாறும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். நம்பிக்கை ஏற்படும்.
லாபம் அதிகரிக்கும்
சனிக்கிழமையில் நீங்கள் தெய்வ வழிபாடு செய்வது நன்மையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். தோல், சளி, சுவாசக் கோளாறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும் காலகட்டம். அனைத்து விதமான விஷயங்களிலும் அனுகூலம் ஏற்படும்.
பண வரவு நிச்சயம்
பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். முதலீடுகளைச் செய்யத் தொடங்குவீர்கள். அசையும், அசையா பொருள்களை சேர்க்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நீண்டகாலமாக வண்டி, வாகனங்கள் வாங்க என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு வண்டி, வாகனம் வாங்குவதற்கான சிறந்த நேரமாக இருக்கும்.
நகைகள் வாங்கும் யோகம்
ஆடி மாதத்தில் அதிக அளவிலான நகைகளை வாங்கிக் குவிக்கும் யோகம் உண்டாகும். எல்லா விஷயத்திலும் நன்மை கிடைக்கும் காலகட்டம். ஆனால், குடும்பத்தில் மட்டும் வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலையிலும், மனைவியாக இருந்தால் கணவனின் உடல்நிலையிலும் அக்கறை செலுத்துவது நல்லது.
ஏற்றம்
தொழில் சார்ந்த விஷயங்களில் அபரிமிதமான முன்னேற்றங்கள் ஏற்படும். கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும். இடமாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், தொழில் மாற்றம் என அனைத்து விதமான ஏற்றங்களும் கிடைக்கும் நேரமாக இருக்கும்.
-
ராஜயோகம் பெறும் கடக ராசி.. ஜூன் மாதத்தில் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications